April 11, 2017 தண்டோரா குழு
அகமதாபாத்தில் உள்ள ஐஐடி பொறியியல் கல்லூரியில் 80 சதவீதம் கண் பார்வை இழந்த பெண் ஒருவர் மேலாண்மை ஆய்வுகள் படிக்க சேர்ந்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.
குஜராத் மாநிலத்தை சேர்ந்த பிராச்சி சுக்ஹ்வாணி(21) என்பவர் அங்குள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார்.
இவருடைய கண்களின் விழித்திரையிலிருந்த செல்கள் குறைய குறைய 3 வயதிலிருந்து கண்பார்வையும் குறைய தொடங்கியது.இந்த நோய்க்கு ‘மாக்குளர் டிச்ற்றோபி’ என்று பெயர்.மரபணு கோளாறால் ஏற்படும் இந்த அரிய நோய்க்கு சரியான சிகிச்சையில்லை.
கண்பார்வை குறைந்துக்கொண்டே இருந்தாலும், உலகின் முதன்மையான மேலாண்மை நிறுவங்களில் சேர்ந்து படிக்க வேண்டும் என்னும் நோக்கம் மட்டும் குறையவேயில்லை. அவர் 2௦16ம் ஆண்டு நடந்த பொது தேர்வில்(CAT) 98.55 சதவீதம் பெற்று வெற்றிப்பெற்றார்.
இதுக்குறித்து பிராச்சி கூறுகையில்,
“ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்பது என்னுடைய குறுகிய கால இலக்காகும். எனக்கு அனுபவம் கிடைத்த பிறகு, நான் என் சொந்த தொழிலை தொடங்குவேன். கண் பார்வையற்றவர்களுக்கு ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்க வேண்டும் என்பது தான் என்னுடைய நீண்டகால இலக்காகும்” என்று கூறினார்.
பிராச்சியின் தந்தை கூறுகையில்,
“கண்பார்வை கோளாறுக்கு சென்னையில் 15 ஆண்டுகளாக சிகிச்சை பெற்றாள். படிப்பதற்கு விசேஷ கண்ணாடியை பயன்படுத்தும்படி மருத்துவர்கள் அவளுக்கு ஆலோசனை கொடுத்தனர். படிப்பில் மூழ்கியிருந்த அவளுக்கு அந்த கண்ணாடி ஒரு தடையாக இருப்பதாக அவள் உணர்ந்தாள். ஐஐஎம் பெங்களூர், ஐஐஎம் கொல்கத்தா மற்றும் ஐஐஎம் அகமதாபாத் ஆகிய முதன்மையான மூன்று கல்லூரிகளிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. அந்த கல்லூரிகளில் நடைபெற்ற நேர்காணலில் கலந்துக்கொண்ட பிறகு ஐஐஎம் அகமதாபாத் கல்லூரியை அவள் தேர்ந்தெடுத்துள்ளார்.