August 31, 2017 தண்டோரா குழு
கத்தார் நாட்டிற்கு செல்லும் பாகிஸ்தான் நாட்டினருக்கு “Visa on Arrival” என்னும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் நாட்டிலிருந்து கத்தார் நாட்டிற்கு வரும் பாகிஸ்தான் நாட்டின் சுற்றுலா பயணிகள், கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, அந்த நாட்டில் சுமார் 3௦ நாட்கள் தங்க “Visa on Arrival” வழங்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. அவர்கள் 3௦ நாட்களுக்கு பிறகு, அங்கேயே தங்க விரும்பினால், அவர்களுடைய விசாவை நீடித்துக்கொள்ளலாம்.
கத்தார் நாட்டிற்கு வரும் பாகிஸ்தான் சுற்றுலா பயணிகள், குறைந்தது 6 மாதம் செல்லுப்படியாகும் கடவுசீட்டை வைத்திருக்க வேண்டும். அங்கிருந்து திரும்பி தங்கள் நாட்டிற்கு போவார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விமான பயணசீட்டு அவர்களிடம் இருக்க வேண்டும் என்று கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் விசா இல்லாமல் கத்தார் நாட்டிற்கு வரலாம் என்னும் திட்டத்தை அந்நாடு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.