May 31, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்ட குடிமக்கள் வாழ்வுரிமை சங்கத்தின் மூலம், சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த குமார் என்பவர், கந்துவட்டி காரரான மனோகரன் என்பவர் வட்டி கேட்டு தொல்லை செய்வதாகவும் மிரட்டுவதாகவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார்.
இது குறித்து பேசிய குமார்,
தனது தந்தை வெள்ளியங்கிரி சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த மனோகரன் எனவரிடமிருந்து கடனாக 50 ஆயிரம் வாங்கியதற்கு மிட்டர் வட்டி என கூறி பல லட்சம் ரூபாய் திருப்பி தர வேண்டும் என தொல்லை கொடுத்து வந்ததாகவும் இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகாரை வாபஸ் பெறச் சொல்லி சில ஆட்களை கொண்டு மிரட்டுவதாகவும் தற்போது தனது தந்தை கால் அறுவை சிகிச்சை செய்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனோகரன் தன்னையும் தனது மாற்றுத்திறனாளி தம்பியையும் பணம் தர சொல்லி தொடர்ந்து தொல்லை கொடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
மனு அளிக்க வந்த குமார் மற்றும் அவரது உறவினர்கள் “கந்துவட்டிக் கொடுமை… அராஜகம்… மீட்டர் வட்டி…, துப்புரவு தொழிலாளர்களின் ஏடிஎம் கார்டுகளை சிங்காநல்லூர் கந்துவட்டி மனோகரனிடமிருந்து பறிமுதல் செய்க, வெள்ளியங்கிரி கொடுத்த கந்துவட்டி புகார் மீது நடவடிக்கை எடுத்து மனோகரனை கைது செய்ய வேண்டும்” என வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஏந்தி மனு அளிக்க வந்தனர்.