• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர் – கமல் வேதனை

September 1, 2017 தண்டோரா குழு

கனவோடு வந்த மாணவி அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர் என நடிகர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வரை சந்தித்தப்பின் சென்னை திரும்பும் வழியில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

மாணவி அனிதாவின் மரணம் மிகுந்த மனவேதனை அளிக்கிறது. இது போன்ற துயரம் இனி நிகழக்கூடாது.அவரது மரணத்தால் ஒரு நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். நீட் தேர்வுக்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம், பேரம் பேசி கொண்டிருக்கிறார்கள். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு எதிராக அனைவரும் சாதி, கட்சி, மதம், மாநிலம் கடந்து போராட வேண்டும்.

அனிதா என்னுடைய மகள், என்னுடைய மகளுக்காக நான் குரல் கொடுப்பேன். கனவோடு வந்த அனிதாவை மண்ணோடு புதைத்து விட்டனர். தமிழகத்தின் அரசியல் நிலவரம் வேடிக்கையாக உள்ளது எந்த பக்கமும் சாயமாட்டேன். தமிழகத்தின் நலன் கருதி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க