September 5, 2017 தண்டோரா குழு
திருப்பூர் அருகே பெய்த கன மழையால் அரசு பள்ளிக்குள் மழை நீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. வெள்ள நீரை அகற்றாத நீர்வாகத்தை கண்டித்து பெற்றோர் முற்றுகை .
திருப்பூர் மாவட்டம் மங்கலத்தை அடுத்த இடுவாய் பகுதியில் அமைந்துள்ளது அரசு உயர்நிலைப்பள்ளி. சுமார் 310 மாணவ மாணவிகள் கல்வி இதில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறை காற்றுடன் கன மழை பெய்து வருகிறது. மேலும் கடந்த 3 தினங்களாக தொடர்ச்சியாக விடுமுறை அளிக்கப்பட்டதையடுத்து இன்று வழக்கம் போல் பள்ளி காலை திறந்த போது மழை நீர் பள்ளி வளாகத்தை சூழ்ந்து வெள்ளக்காடாய் காட்சி அளித்தத்தை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் வகுப்பறைக்குள்ளும் தண்ணீர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்து பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் முற்றுகையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே பள்ளியை பார்வையிட வந்த கல்வி அதிகாரி உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளித்ததோடு மழை நீரை அகற்றும் பணிக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் பள்ளிக்கு அருகில் உள்ள தனியார் நிறுவனம் மண்ணை கொட்டி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால் தான் மழை நீர் பள்ளிக்குள் புகுந்தததாக குற்றம் சாட்டினர்.இச்சம்ப்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.