April 5, 2017 தண்டோரா குழு
கமலிடம் நான் எப்போது ஜாக்கிரதையாக தான் இருப்பேன் என்று கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசனின் நினைவேந்தலில் ரஜினிகாந்த் பேசினார்.
நடிகர் கமல்ஹாசனின் அண்ணன் சந்திரஹாசன் கடந்த மார்ச் 19ஆம் தேதி லண்டனில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது நினைவேந்தல் இன்று சென்னையில் உள்ள காமராஜர் அரங்கில் நடந்தது.
இந்த நினைவேந்தலில் நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், நாசர், விஷால், கே.எஸ். ரவிக்குமார், இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது ரஜினிகாந்த் பேசுகையில்,
கமல் “தன்னுடைய வாழ்க்கையில் மூன்று பேரை தனது தந்தையாக கமல் நினைத்திருந்தார். ஒன்று மறைந்த திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தர், இரண்டாமவர் அவரது மூத்த அண்ணன் சாருஹாசன், மூன்றாமவர் சந்திரஹாசன். சாருஹாசன் அண்ணனுடன் பல படங்களில் நான் நடித்துள்ளேன். ஆனால், சந்திரஹாசன் அண்ணன் அவர்களை இரண்டு முறைதான் சந்தித்து உள்ளேன்’ என்றார். மேலும், கமலை போன்ற ஒரு கோபக்காரரை நான் பார்த்தது இல்லை. கமல் கோபக்காரார் என்பதால் நான் அவரிடம் எப்போதும் ஜாக்கிரதையாக இருப்பேன். அவரை அவரது அண்ணன் சந்திரஹாசன் தான் வழி நடத்துவார். இப்போதைய நடிகர்களுடன் ஒப்பிடும்போது, அவர்களிடம் இருக்கும் பணம், சொத்து கூட கமலிடம் இல்லை என்று ரஜினி உருக்கமாக பேசினார்.