March 14, 2017 தண்டோரா குழு
நடிகர் கமல் இதுவரை எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக சேலத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பேசியதாவது
நடிகர் கமல்ஹாசன் என்னை பற்றியும் தற்போது உள்ள ஆட்சித் தொடரக்கூடாது என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.ஆட்சி மீது குற்றம்சாட்டுபவர்கள் என்ன குறை கண்டார்கள்.கமல் இதுவரை எந்த கிராமத்துக்காவது சென்று மக்களை சந்தித்திருப்பாரா என கேள்விஎழுப்பினார்.
விஸ்வரூபம் படம் வெளியாக உதவி செய்தவர் ஜெயலலிதா என்றும் கமல்ஹாசன் அந்த நன்றியை மறந்து பேசுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், எனக்கு முதலமைச்சராகும் தகுதி இல்லை என்பதா? நான் அடிமட்ட தொண்டனாக இருந்து தான் தற்போது முதலமைச்சராக வந்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் தனியார் தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.