September 7, 2017 தண்டோரா குழு
வடக்கு அட்லான்டிக் கடலில் உருவாகியுள்ள ‘இர்மா’ புயலால் கரீபியன் நாடடு பலத்த சேதம் அடைந்துள்ளது
இர்மா புயல் கரீபியன் நாடுகளில் ஒன்றான புர்டோ ரிகோ நாட்டை தாக்கிய பிறகு, அதை சுற்றியுள்ள சிறிய சிறிய தீவுகளை புரட்டிப்போட்டது. சுமார் 1,800 மக்கள் வசிக்கும் பர்புடா தீவில் பலத்த சேதம் ஏற்பட்டது. கரீபியன் நாட்டை தாக்கிய இர்மா புயல் மணிக்கு 185 கிலோமீட்டர் வேகத்தில் வீசியது. அதனால், கட்டடங்கள் மற்றும் விடுதிகள் தரைமட்டம் ஆனது. கரீபியன் நாட்டிற்கு வந்த பிரிட்டிஷ் சுற்றுலா பயணிகளை பத்திரமான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
இந்த புயலின் காரணமாக செயின்ட் மார்டின் மற்றும் பர்புடா தீவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் இடிந்து விழுந்தது, மின்சார இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டன. சாலையில் வெள்ளம் அதிகரித்தது. மக்கள் உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் அவதிபடுகின்றனர்.
இர்மா புயல் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகணத்தை நோக்கி நகர்ந்துள்ளதால், ப்ளோரிடா கடற்கரை பகுதியிலிருக்கும் மக்கள் பத்திரமான இடத்திற்கு செல்லும்படி, அந்த மாகணத்தின் ஆளுநர் அறிவித்துள்ளார். இந்த புயலால், கடலில் பெரிய அலைகள் எழும்ப வாய்ப்பு உண்டு என்று எச்சரிக்கை தரபட்டுள்ளது. இர்மா புயல் எச்சரிக்கையால் ப்ளோரிடா மாகணத்தில் அவசர நிலையை அமெரிக்க குடியரசு தலைவர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ளார்.