May 24, 2017 தண்டோரா குழு
சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள் நிறைவு செய்ததையொட்டி திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி வைர விழாவாக நடைபெறவுள்ளது. இந்த பிரம்மாண்ட விழாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.இதற்கான ஏற்பாடுகள் தி.மு.க கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
வைர விழாவில் கருணாநிதி கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை எனவும், மருத்துவர்கள் அனுமதி வழங்கினால் மட்டுமே அவர் கலந்து கொள்வார் எனவும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை, மு.க.ஸ்டாலினும், துரைமுருகனும் அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வைரவிழாவுக்கான அழைப்பிதழை கருணாநிதியிடம் வழங்கினர்.