July 18, 2017
தண்டோரா குழு
திமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவைக்கு வர விலக்கு கோரிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவால் ஓய்வெடுத்து வருகிறார்.அதனால் தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அவர் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் உடல் நிலையை கருத்தில் கொண்டு திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வர விலக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு
வந்தார். இந்தத் தீர்மானம் இன்று சட்டசபையில் ஆளும் கட்சியின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
மேலும், நேற்று நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலிலும் அவர் வாக்களிக்க வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது