March 15, 2017
தண்டோரா குழு
தமிழகத்தின் அம்மா உணவகங்களைப் போல் கர்நாடக மாநிலத்தில் நம்ம உணவகங்கள் கொண்டு வர உள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா அறிவித்துள்ளார்.
கர்நாடக அரசின் பட்ஜெட்டை, அம்மாநில முதல்வர் சித்தராமைய்யா புதன்கிழமை தாக்கல் செய்தார்.
அவற்றில் தமிழகத்தின் அம்மா உணவகங்களைப் போல் கர்நாடகத்தில்ல் நம்ம உணவகங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும், இவற்றில் சிற்றுண்டிகள் ரூ.5 க்கும், சாப்பாடு ரூ.10க்கும் விற்பனை செய்யப்படும். பெங்களூருவில் மட்டும் 198 உணவகங்கள் திறக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், பெங்களூரில் உள்ள ஏரிப் பிரச்னைகளைத் தீர்க்க பெலந்தூர், வர்தூரில் உள்ள ஏரிப் பணிகள் முழுவதுமாக விரிவாக்கம் செய்யப்படும். இரு சக்கர வாகனங்களுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்படும்.
இதனால் இரு சக்கர வாகனங்களின் விலை ரூ.1 லட்சத்திற்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார்.