• Download mobile app
22 Apr 2025, TuesdayEdition - 3359
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்லட்டி மலைப்பாதையில் அடிக்கடி விபத்துகள்

February 21, 2017 அனீஸ்

நீலகிரி மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற முதுமலை புலிகள் காப்பகம் கேரளம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

மேலும் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலமாக முதுமலை புலிகள் காப்பகம் விளங்கி வருகிறது. இங்குள்ள வன விலங்குகளைக் காண பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். இதில் கோடை சீசன் நிலவும் காலமான ஏப்ரல், மே மாதங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முதுமலையைக் கண்டு ரசிக்கச் செல்கின்றனர். அப்போது அவர்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் பாதையாக கல்லட்டி மலைப்பாதை விளங்குகிறது. மேலும், கர்நாடகம், கேரளம் ஆகிய இடங்களிலிருந்து உதகைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளில் பலர் முதுமலையில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாகவே செல்கிறார்கள்.

இந்நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகளும், செங்குத்தான சாலையும் உள்ளன. இதனால் இந்த மலைப் பாதை ஆபத்துகள் நிறைந்தது. இதன் காரணமாக கல்லட்டி மலைப்பாதையில் கார், ஜீப் போன்ற 4 சக்கர வாகனங்களும், இரு சக்கர வாகனங்களும் செல்ல மட்டும் அனுமதி உள்ளது.

மேலும், இந்த மலைப்பாதையில் வாகனங்களில் செல்பவர்கள் 2வது மற்றும் முதல் கியரில்தான் செல்ல வேண்டும் என்று ஆங்காங்கே அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதையும் மீறி அடிக்கடி விபத்துகள் நடைப்பெறுகின்றன.

சமவெளிப் பிரதேசங்கள், அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வாகனங்கள் அறிவிப்புப் பலகைகளில் அறிவுறுத்தப்பட்டிருக்கும் வாசகங்களைக் கடைப்பிடித்தால் விபத்துகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு. ஆனால், அதையும் மீறி வாகன ஓட்டிகளின் கவனக் குறைவாலும், செல்போன் பேசிக்கொண்டும், குடி போதையிலும் வாகனங்களை இயக்குவதாலுமே அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சில சமயம் உயிரிழப்புகளும் நேர்கின்றன.

இதைக் கருத்தில் கொண்டு, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களைக் கல்லட்டி சோதனைச் சாவடியில் ஓர் அதிகாரி கடந்த சில வருடங்களுக்கு முன்பு போக்குவரத்து அறிவுரைகளை வழங்கி வந்தார்.

“பயணிகளின் பாதுகாப்பு கருதி, ஒருவர் தாமாகவே முன் வந்து வாகனங்களை நிறுத்தி பொறுமையாகச் செல்ல வேண்டும், விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும்” என்று ஒவ்வொரு வாகன ஓட்டியையும் நிறுத்தி அறிவுறுத்தி வந்தார். ஆனால், அவர் மரணமடைந்த பின் இது போன்ற அறிவுரைகளை வழங்க யாரும் முன் வரவும் இல்லை. மாவட்ட நிர்வாகமும் யாரையும் நியமிக்கவும் இல்லை.

எனவே, மாவட்ட நிர்வாகம் வாகன ஓட்டுநர்களுக்கு மலைப்பாதை எவ்வளவு ஆபத்தானது என்றும், விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுரைகளை வழங்க ஒருவரை பணியமர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.அது மட்டுமின்றி, வாகன ஓட்டுநர்கள் தங்களது முழுக் கவனத்தையும் வாகனம் ஓட்டுவதில் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க