March 17, 2022
தண்டோரா குழு
கல்லட்டி மலை பாதையில் உள்ள 22 கொண்டை ஊசி வளைவில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் படுகாயம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் செல்லபட்டியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் முதுமலைக்கு கல்லட்டி மலை பாதை வழியாக காரில் சென்ற போது கார் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துகுள்ளானது.அதில் புகழேந்தி, ராஜ்குமார், தென்னரசு, பிரவீன், கௌதம் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களை மீட்ட பொதுமக்கள் உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.