• Download mobile app
30 Nov 2024, SaturdayEdition - 3216
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கள்ளு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்காவிட்டால் அஸ்வமேத யாகம் நடத்தப்படும் – நல்லசாமி

September 4, 2021 தண்டோரா குழு

கள்ளு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவில்லையென்றால் 2022 ஜனவரியில் அஸ்வமேத யாகம் சென்னையில் நடத்தப்படும்.தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் கள்ளு நல்லசாமி கூறியுள்ளார்.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது பேசிய கூட்டமைப்பின் செயலாளர் கள்ளு நல்லசாமி கூறுகையில்,

“3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய போராளிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதேபோன்று அரசியல் அமைப்பு சட்டபடி கள் இறக்கிய போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளையும் தமிழக் அரசு திரும்ப பெற வேண்டும் என்ற வேண்டுகோளை வைப்பதாக தெரிவித்தார்.

கள் ஒரு போதை பொருள் அல்ல என்று நாங்கள் பல ஆண்டுகளாக தெரிவித்து வருகிறோம் என்றும் கள் என்பது மக்களின் உணவு தேடும் உரிமை எனவே கள்ளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க 17 ஆண்டுகளாக தமிழ்நாடு கள் இயக்கம் போராடி வருகிறது என கூறினார். கள் தடை செய்யபட வேண்டிய போதை பொருள் என்று நிரூபித்தால் 10 கோடி ரூபாய் தருவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த பரிசை எளிதாக பெரும் விதத்தில் கலைஞர் ஆட்சியில் இருந்து சென்னையில் அஸ்வமேத யாகம் நடத்தப்பட்டது. அந்த யாக குதிரையை தடுத்து நிறுத்தி கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய பொருள் என்று நிரூபிக்க யாரும் முன்வரவில்லை. இருப்பினும் கள் தடை தொடர்கிறது. இதனை உடனடியாக நீக்க வேண்டுமென்றும் இல்லையெனில் வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காவது முறையாக சென்னையில் அசுவமேத யாகம் நடத்தப்படும்.

இந்தியாவில் மக்கள் தொகையையும் கலப்படங்களையும் கட்டுப்படுத்தி இருந்தால் நாடு எப்பொழுதோ வல்லரசாகி இருக்கும். மருந்து பொருள்களில் இருந்து பல்வேறு பொருட்களில் தற்போது கலப்படங்கள நடக்கிறது. மாதாந்திர நீர் பங்கீடு என்ற அம்சம் காவிரி தீர்ப்பில் இருக்கும் வரை தமிழகம் கர்நாடகாவின் வடிகாலாகவே இருக்கும்.

காவிரி அணையில் நீர் அதிகமாகும் போது மட்டுமே நமக்கு நீர் அளிக்கிறார்களே தவிர்த்து நமது உரிமை நீரை அவர்கள் வழங்குவதில்லை. தினந்தோறும் நீர் பங்கீடு செய்தால் தான் இதற்கு தீர்வு காண இயலும். பல்வேறு திருத்தங்கள் இங்கு செய்யப்பட வேண்டி உள்ளது. அந்த திருத்தங்களைச் செய்து இந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் அப்பொழுதுதான் உள்ளாட்சியாக இருக்கும். இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததன் காரணமாக தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மானியம் வர வில்லை.

உள்ளாட்சியில் நேரடி மக்களாட்சி இதில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தேர்தல் நடத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை உச்சநீதிமன்றம் கூறியதனாலேயே இம்முறை தேர்தலை வேண்டா வெறுப்போடு நடத்துகிறார்கள். எனவே தமிழக தேர்தல் ஆணையம் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை இந்திய தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோருகிறோம்.

அப்பொழுது தான் உள்ளாட்சி நல்லாட்சியாக இருக்கும். பீகார், கேரளாவில் எல்லாம் மதுவிற்கு தான் தடை விதிக்கப்பட்டது ஆனால் கள்ளுக்கு தடைவிதிக்கவில்லை அப்படி இருந்த தமிழகத்தில் மட்டும் ஏன் தடை விதிக்கப்படுகிறது. கள்ளில் கலப்படம் செய்வதை தடுக்க இயலாததால் தடை விதிக்கப்படுகிறது என்றால் கலப்படத்தை தடுக்க அரசால் இயங்கவில்லை என்று தான் கூற வேண்டும்.கலப்படத்தை கட்டுபடுத்த இயலாத ஆளுமை இல்லாத அரசாக உள்ளது. பெரியார் ஒரு காலம் கள்ளை ஆதரித்தார். அதன் பின்பு தான் கள் இறக்கும் தென்னை மரங்களை வெட்டினார்.

எனவே கள் ஆதரவாளராக இருந்த பெரியாரின் வழி எங்களுக்கு ஆதரவளிக்கும் படி வீரமனியை கேட்டோம் ஆனால் பதிலில்லை. அவர்கள் பெரியாரின் புகைப்படங்களை வைத்துக்கொண்டு பெரியாரின் கொள்கைகளை பின்பற்றுவதில்லை என தெரிவித்தார். எனவே தமிழக அரசு கள்ளின் மீது போடப்பட்டுள்ள தடையை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க