October 30, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சி தூய்மை பாரத இயக்கம் சார்பில் தனிநபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு பொது மக்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கழிப்பிடங்கள் கட்டித்தரப்படும் என மாநகராட்சி கமிஷனர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்
`கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஒன்றிய மற்றும் மாநில அரசின் நிதியின் மூலம் தனிநபர் கழிப்பிடம் இல்லாத வீடுகளுக்கு தூய்மை பாரத திட்டத்தின்கீழ் கழிப்பிடம் கட்டித்தருவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்றப்படுகிறது. இதற்கென ஒன்றிய அரசின் மான்யமாக ரூ.4000-மும், மாநில அரசின் மான்யமாக ரூ.2667-மும் மற்றும் நகராட்சி பங்குத் தொகை ரூ.2667 ஆக நிதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் விண்ணப்பங்களை அந்தந்த மண்டலங்களில் உள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்” என்றார்.