March 7, 2022 தண்டோரா குழு
கோவை ராமநாதபுரம்,பஜனை கோவில் வீதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் ஆட்டோ டிரைவர்.கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு தனது 3 பெண் குழந்தைகளுடன் அவரது பாட்டி மனைவியுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தார்.
எனது பாட்டிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்பட்ட காரணமாக மருத்துவச் செலவுக்காக நான் என்னுடைய பாட்டி பத்திரத்தை கொடுத்து சுரேஷ் என்கிற சுரேந்திரன் இடம் 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் கேட்டு இருந்தேன்.
இதற்கு மாத வட்டியாக 1,500 தருவதாக வாக்குறுதி அளித்து கொடுத்து வந்தேன். இதுவரை 85 ரூபாய் வட்டி செலுத்தி உள்ளேன்.
குடும்ப சூழ்நிலை கொரோனா காரணமாக தொடர்ந்து பணம் செலுத்த முடியவில்லை.இந்த நிலையில் பத்திரத்தை அவரிடம் கேட்டபொழுது இதுவரை 8 லட்சத்து 25 ரூபாய் கொடுக்க வேண்டியது உள்ளது. முழுமையாக கட்டினால்தான் உன் பாட்டியின் பத்திரம் கொடுக்க முடியும் என கூறியது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்து இப்படி வாழ்வதற்கு தற்கொலை செய்து கொண்டு சாகலாம் என கொச்சையாகப் பேசினார்.
இதன் பிறகு கடந்த 23-ஆம் தேதி மாவட்ட கலெக்டருக்கு மனு கொடுத்தேன். கலெக்டர் R.D.0 வுக்கு அனுப்பி விட்டதாக கூறினார். அதன்பின் R.D.0.ஆபீசுக்கு சென்று கேட்டபோது எங்களுக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. கடந்த 3-ஆம் தேதி ஆணையர் அலுவலகத்தில் மனு கொடுத்தேன். ஆனால் மனுவுக்கும் சரியான பதில் கிடைக்கவில்லை. மேலும் கடைசியாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நானும் எனது மனைவி 3 பெண் குழந்தைகளும் எனது பாட்டியும் இந்த மனுவை தங்களிடம் அனுப்பியுள்ளோம்.
தயவுகூர்ந்து எங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். கந்து வட்டியால் அநேக குடும்பங்கள் இறந்து கொண்டிருக்கின்றன. கந்துவட்டி கொடுமை மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பத்தித்தை மீட்டுத் தரும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.