• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கவுண்டமணி அந்த காலத்து அஜித்குமார். சந்தானம் அதிரடி பேச்சு.

April 20, 2016 தண்டோரா குழு

தமிழ் திரையுலகில் பல்வேறு காமெடி ஜாம்பவான்கள் இருந்தாலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துக்கொண்டு கிட்டத்தாட நாற்பது ஆண்டுகள் இவர் இல்லாத படமே ஓடாது என்ற நிலையை உருவாக்கியவர் கவுண்டமணி தான்.

நாகேசுக்கு பிறகு நீண்டநாள் தொடர்ந்து நடித்த காமெடி நடிகரும் அவர்தான். சிறு நடிகர்கள் முதல் சூப்பர்ஸ்டார் வரை யாராக இருந்தாலும் தன்னுடைய மனம் நோகாத வகையிலான பேச்சால் கலாய்க்கும் ஒரே நடிகரும் இவர் தான்.

சில வருடங்கள் ஓய்வுக்குப் பிறகு 49ஓ என்ற அரசியல் பேசும் படத்தில் நடித்தார். இது கமர்சியலாக ஓடவில்லை என்றாலும் விவசாயம் குறித்த ஒரு தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. விழாவில் இயக்குநர் சுசீந்திரன், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் சந்தானம் பேசுகையில், காமெடிக்கே ஒரு டிப்போ வைத்திருப்பவர் என்றால் அது கவுண்டமணி அண்ணன் தான், நான் மேடையில் உட்கார்ந்திருந்த சில நிமிடங்களில் இங்கிருந்த பலரையும் கலாய்த்துத் தள்ளிவிட்டார். என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை என தெரிவித்தார்.

மேலும் கவுண்டமணி அண்ணனும் அஜித் சாரும் ஒன்று தான் எனக் கூறியவுடன் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அதற்கு விளக்கம் கொடுத்த அவர் தற்போது தான் நடித்த படமே ஆனாலும் ப்ரோமோசன் உள்ளிட்ட எந்த வகை மேடையிலும் ஏறாதவர் அஜித்.

அதே போல அந்த காலத்தில் மேடை நிகழ்ச்சியில் கலந்துகொல்லாமலும், பேட்டி கொடுக்கக்கூட நேரமில்லாமல் பிசியாக இருந்தவர் கவுண்டமணி அண்ணன். அதனால் தான் அவரை அந்தகாலத்து அஜித் குமார் எனக் குறிப்பிட்டேன் எனத் தெரிவித்தார். மேலும் அண்ணனின் பட விழாவிற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க