• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஸ்தூரிபாளையம் சாலையில் இருபுறமும் உள்ள பள்ளத்தால் தொடரும் விபத்துகள்

April 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரி பாளைம் சாலையில் குறுகிய பகுதியில் இருபுறமும் உள்ள பள்ளத்தால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பால பணிகள் மந்த கதியில் நடக்கிறது. திட்டமிடப்படாத மாற்றுச்சாலைகள், தேசிய நெடுஞ்சாலை முழுவதுமாக அடைப்பு போன்ற பல்வேறு காரணங்களால் மாற்றுச்சாலைகளில் மக்கள் பயணித்து வருகின்றனர். இதில் முக்கிய மாற்றுச்சாலையாக பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து கஸ்தூரி பாளையம் சாலை வழியாக வீரபாண்டி பிரிவு செல்லும் சாலை உள்ளது.

இதில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட கஸ்தூரி பாளையம் செல்லும் வழியில் உள்ள குறுகிய சாலையில் இருபுறமும் பள்ளம் உள்ளது. இதனால் இரண்டு வாகனங்கள் எதிர் எதிர் வரும் போது பள்ளம் உள்ளது தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மேலும் இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாததால் அவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் என்னில் அடங்கா துயரங்களை சந்தித்து வருகின்றனர்.

பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகளை வேகமாக முடிக்க வேண்டும்.மாற்றுச்சாலைகளை மேம்படுத்த வேண்டும். குறுகிய சாலையில் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்புகள் வைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க