March 11, 2022
தண்டோரா குழு
கோவை வடவள்ளியை சேர்ந்தவர் அருன்குமார்(27). இவர் எம்.எஸ்.சி பட்டதாரி. வேலை தேடிக்கொண்டு இருப்பவர்.
இதனிடையே கல்லூரியில் படித்த போது அங்கு படித்த பெண் ஒருவரோடு இவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.ஆனால் அக்காதல் நீண்ட காலம் நிலைக்கவில்லை.காதல் தோல்வியடைந்தது.
காதலித்த பெண் இவரை ஏற்க மறுத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அருன்குமார் நண்பர்களுடன் வீட்டிற்கு அருகில் விளையாட சென்ற போது விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழங்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.