July 20, 2017 தண்டோரா குழு
நமது தேச தந்தை மகாத்மா காந்தியை கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றிய பிகு தஜி பிலாரே தனது 98 வயதில் காலமானார்.
ஜனவரி 3௦, 1948ம் ஆண்டு, புதுதில்லியில் உள்ள பிர்லா வீட்டில் நாதுராம் கோட்சே நமது தேச தந்தை மகாத்மா காந்தியை சுட்டு கொன்றான்.இதற்கு முன்பே,அவரை கத்தியால் கொலை செய்ய முயன்று உள்ளான்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் முன்னணி குழுக்களில் ஒன்றான ‘ராஷ்டிரா சேவை தல்’ அமைப்பின் தலைவராக இருந்த 25 வயது பிஜு தாசி பிலரே காந்தியின் உயிரை காப்பற்றியுள்ளார். அவர் நேற்று(ஜூலை 19) மகாராஷ்டிரா மாநிலத்தில் காலமானார். அவருக்கு 98 வயது.
பிகு தஜி பிலாரே உடல் தகனத்தின்போது, சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பிகு தஜி பிலாரே இறப்பிற்கு காங்கிரஸ் கட்சி துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட மற்ற மூத்த தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
பிகு தஜி பிலாரே ஒரு தீவிர காந்தியவாதி மற்றும் சுதந்திர போராட்ட வீரர். அவருடைய மறைவு வருத்தத்தை தருகிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்” என்று காங்கிரஸ் துணை தலைவர் தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.