July 13, 2017
தண்டோரா குழு
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் பேசிய வார்த்தைக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன் அவரது தாயார் கூறியுள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் 15 பங்கேற்பாளர்களில் ஒருவராக நடிகை காயத்ரி ரகுராம் பங்கேற்றுள்ளார். அப்போது நிகழ்ச்சியில் ஓவியாவை காயத்ரி சேரி பிஹேவியர் என கூறினார். காயத்ரி ரகுராம் கூறியதற்கு கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுத்துள்ளது.
இதற்கிடையில், ஒதுக்கப்பட்ட மக்களுக்காக போராடிவரும் எவிடன்ஸ் கதிர் இது தொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாக முடிவெடுத்துள்ளார்.
இந்நிலையில், காயத்ரி ரகுராமின் தாய் கிரிஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
தற்போது என் மகள் மீது அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது. ஒரு பெண்ணை இந்த அளவுக்கு இழிவுபடுத்தக்கூடாது. ஒருவேளை பாஜகவில் உள்ளதால் விமர்சனங்கள் செய்கிறார்களா எனத் தெரியவில்லை. இதனால் நான் மனவருத்தம் அடைந்துள்ளேன். என் மகளின் பேச்சுக்கு நான் மன்னிப்பு கேட்கிறேன். ஒரு தாயின் மன வருத்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.