November 2, 2022 தண்டோரா குழு
கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள், அரசு மருத்துவமனையில், காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் கோவையின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்,கோவை மாவட்டத்தில் காய்ச்சல் பரவலைத் தடுக்க,43 மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அரசு மருத்துவமனையில்,காய்ச்சலுக்கென சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,
பருவ மழையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கென, தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதில், 42 படுக்கை வசதிகள் உள்ளன. மேலும் 2 ஐ.சி.யூ படுக்கைகளும் உள்ளன. காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால், சுயமாக மருந்துகளை உட்கொள்ளாமல், அருகில் உள்ள மருத்துவர்களை அணுக வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.