• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமடை நகர்மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர் சக கவுன்சிலர்களை நாய்கள் என விமர்சித்ததால் பரபரப்பு

August 2, 2023 தண்டோரா குழு

காரமடை நகர்மன்ற கூட்டத்தில் பெண் கவுன்சிலர் ஒருவர் சக கவுன்சிலர்களை நாய்கள் என விமர்சித்ததால் என கூறப்படுகின்ற நிலையில் கடும் வாக்குவாதம்.தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல் மன்றக்கூட்டம் ஒத்திவைக்கப்ட்டது.

காரமடை நகராட்சியில் மொத்தமாக 27 வார்டுகள் உள்ளன.காரமடை நகராட்சியின் மாதாந்திர நகர மன்ற கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நேற்று நகர்மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் ஆணையர் அமுதா, நகராட்சி பொறியாளர் சுகந்தி முன்னிலையில் நடைபெற்றது.

மன்ற கூட்டத்தில் மொத்தமாக 67 தீர்மானங்கள் வார்டு உறுப்பினர்களின் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டன. கூட்டத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கான குறைத்து வழங்கப்பட்ட ஊதியம் ரூ.50/- ஐ ஏற்றி உடனடியாக அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கும்,நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவிற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் நகர்மன்ற தலைவர், துணைத்தலைவர்,மன்ற உறுப்பினர்களுக்கு மதிப்பூதியம் வழங்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர்கள் பேசியதாவது :

2 வது வார்டு உறுப்பினர் குரு பிரசாத் (திமுக) – மேட்டுப்பாளையம், காரமடை என இரு நகராட்சிகளுக்கும் ஒரே ஆணையர்,ஒரே நகராட்சி பொறியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதேபோல் ஒரே நாளில், ஒரே நேரத்தில் மேட்டுப்பாளையம் காரமடை, நகராட்சிகளில் நகர்மன்ற கூட்டம் அறிவிக்கப்பட்டதால் ஆணையரும், பொறியாளரும் மேட்டுப்பாளையம் நகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தை முடித்துவிட்டு காரமடை நகராட்சிக்கு வர தாமதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இன்றைய கூட்டத்தில் வார்டு உறுப்பினர்களின் குறைகள் மட்டும் கேட்க வேண்டும்.தீர்மானம் ஏதும் நிறைவேற்றக்கூடாது.20″வது வார்டு உறுப்பினர் விக்னேஷ்
(பாஜக) – ஒரே நாளில் 67 தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்காக முன் வைக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே தாமதமாக கூட்டம் துவக்கப்பட்டுள்ளது.இதில் எவ்வாறு விவாதம் செய்வது? எத்தனை தீர்மானங்களை நிறைவேற்றுவது? நகராட்சி ஆணையர் அமுதா – இன்றைய கூட்டத்தில் மன்ற உறுப்பினர்களின் குறைகள் மட்டுமே கேட்கப்படும்.

தீர்மானங்கள் வேறு ஒரு நாளில் மன்ற கூட்டம் நடத்தப்பட்டு அன்று விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படும்.இந்த நிலையில் திமுகவைச்”சேர்ந்த பெண் கவுன்சிலர் ஒருவர் பேச முயற்சிக்கும் போது மற்ற கவுன்சிலர்கள் கூறுக்கிட்டனர். அப்போது பிற கவுன்சிலர்களை அந்த கவுன்சிலர் நாய் என விமர்சனம் செய்ததாக கூறப்படுகின்றது. இதனால் பிற கவுன்சிலர்களை நாய் என விமர்சனம் செய்த திமுக கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக, அதிமுக,பாஜக என அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நகராட்சி தலைவர்,ஆணையர், நகராட்சி பொறியாளர் உள்ளிட்டோரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர்.

இதனையடுத்து நகராட்சி ஆணையர் அமுதா நாய் என மற்ற கவுன்சிலர்களை விமர்சனம் செய்த கவுன்சிலருக்கு பதிலாக அவர் மன்ற உறுப்பினர்கள் இடையே மன்னித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.இதனால் நகர மன்ற கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல், மறுதேதியும் குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க