January 25, 2025 தண்டோரா குழு
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.
அதன் அடிப்படையில் இன்று (25.01.2025) காரமடை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காரமடை காவல் நிலைய காவல்துறையினர் புங்கம்பாளையம் சந்திப்பு அருகே சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த காரமடை பகுதியைச் சேர்ந்த மணி மகன் தமிழ்ச்செல்வன் (36) மற்றும் மணி மகன் மகேஷ் குமார் (34) ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா,கஞ்சாவை கடத்த உபயோகப்படுத்திய நான்கு சக்கர வாகனம்-1, இரண்டு சக்கர வாகனம்-1 மற்றும் செல்போன்-1 ஆகியவற்றை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.