July 14, 2017
தண்டோரா குழு
சேலம் ஆத்தூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஆத்துார் அமர்வு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி உயிரிழந்துள்ளார்.
ஆத்தூர் சார்பு நீதிமன்ற நீதிபதி நாகலட்சுமி தனது குடும்பத்தினருடன் நாமக்கல்லில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது, ஆத்தூர் மல்லியகரை கோபாலபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நிலைதடுமாறிய நீதிபதி கார் எதிர்பாராதவிதமாக சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் நீதிபதி நாகலட்சுமி தேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.