• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காற்று வாங்கும் கல்விக்கூடங்கள்

May 16, 2016 தண்டோரா குழு.

இரண்டே மாணவருடன் 7 வருடங்களாகப் பஞ்சாப் மாநிலத்தின் கபுர்தலாவில் உள்ள பாலைப்பூர் கிராமத்தின் அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

மொத்தம் 20 மாணவர்களுக்குக் கீழ் உள்ள பல பள்ளிகளை அரசு மூடி அக்கம் பக்கமுள்ள கிராமத்தின் பள்ளிகளோடு இணைத்து விடுவது வழக்கம்.

ஆனால் இந்தப் பள்ளியைப் பற்றி ஏனோ அரசு கண்டு கொள்ளவில்லை.

இந்தக் கிராமத்தில் மொத்தம் 35 முதல் 40 குடும்பங்கள் மட்டுமே உள்ளன. அனைத்துப் பெற்றோரும் தங்கள் குழந்தைகளைக் கட்டணம் செலுத்தியாவது தனியார் பள்ளிக்குத்தான் அனுப்புகின்றனரே தவிர அரசுப் பள்ளியை நாடுவதில்லை.

ஒரு மாணவனும் ஒரு ஆசிரியருமே உள்ள இந்தப் பள்ளிக்கு அரசு மதிய உணவு ஆசிரியர் மற்றும் இதர ஊழியர்களின் ஊதியம் போன்றவை உள்பட மாதம் 50,000 ரூபாய் செலவு செய்கிறது.

ஒரு பள்ளியை நடத்தக் குறைந்த பட்ச மாணவர்களின் எண்ணிக்கையை இந்தப்பள்ளி எப்பொழுதுமே எட்டியதில்லை.

கடந்த ஆண்டு 4 மற்றும் 5 வது வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை மொத்தம் 3 தான்.

இந்த மார்ச் மாதம் 2 பேர் தேர்ச்சி பெற்றுச் சென்று விட்ட நிலையில் எஞ்சியிருப்பது ஜகதீப் சிங் எனும் ஒரு மாணவனே.

கமல்ஜித் சிங் என்ற ஆசிரியர் எல்லாப் பெற்றோரையும் தனித்தனியே சந்தித்து குழந்தைகளை அரசுப் பள்ளிக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். கிராம பஞ்சாயத்தையும் அணுகி விவாதித்துள்ளார் ஆனால் இதுவரை எந்தப் பலனும் இல்லை.

இந்நிலையில் அருகிலுள்ள பள்ளியுடன் இப்பள்ளியை இணைக்க அரசு இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காதிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

இதைப் பற்றி பஞ்சாப் அரசு கல்வித்துறை உயர் மட்டக் கல்விக் குழுவிடமும் கலந்து ஆலோசிக்காமல் அலட்சியப் போக்குடனே நடந்து கொண்டிருக்கிறது.

மாவட்ட ஆரம்பக் கல்வித்துறை அதிகாரி குருசரன் சிங் முல்தானி இது குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில் தனக்கு இவ்விஷயங்கள் அனைத்தும் தெரியுமென்றும், கூடிய விரைவில் அருகாமையிலுள்ள பள்ளியுடன் இப்பள்ளி இணைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளிக்கு அனுப்புவதாக உறுதியளித்தமையினால் தான் பள்ளியை இணைக்கும் நடவடிக்கை தாமதப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

இப்பொழுது ஒரு குழந்தை தான் உள்ளது. அதுவும் தேர்ச்சி பெற்றுச் சென்றுவிட்டால் கட்டாயம் பள்ளியை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

இதேப் போன்று தமிழ் நாட்டிலும் உள்ளது. துளசிங்கபுரம் எனும் இடத்தில் உள்ள ஆதிதிராவிடர் வெல்பேர் ஆரம்பப் பள்ளியில் இருப்பது வி.மல்லேஸ்வரன், வி.ஸ்டாலின் என்ற 2 மாணவர்களும், ஆர்.தமிழ்ச்செல்வி என்ற ஆசிரியையும் தான்.

1930ம் ஆண்டு துவங்கிய இப்பள்ளியில் முதலில் 300 மாணவர்கள் பயின்று வந்தனர். பின்பு மழை வெள்ளம் மற்றும் பல காரணங்களினால் 25 பேராகக் குறைந்தது.

இதில் வியப்பு என்னவென்றால் ஆசியர் தமிழ்ச்செல்வி 12 வகுப்பு வரை மட்டுமே படித்தவர். அவரே அனைத்துப் பாடங்களையும் நடத்துபவர்.

இங்கு வகுப்பறையைக் காலை வேளையில் திறக்கும் போது மது பாட்டில்களும், நட்டுவாக்கிளிகளும் இறந்த பாம்பின் சடலமும் காண்பது வாடிக்கை என தமிழ்ச்செல்வி கூறியுள்ளார்.

அரசு, பள்ளியின் தரத்தை உயர்த்தி, ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி கற்கும் வாய்ப்பை வழங்க வேண்டும் என்பதே தற்போது உள்ள ஏழை மாணவர்களின் பெற்றோர் வைக்கும் ஒரே கோரிக்கையாக உள்ளது.

மேலும் படிக்க