April 22, 2023 தண்டோரா குழு
துபாய் நாட்டில் கட்டிட க்கலை வல்லுனராக செயல்பட்டு வந்த முரளி குமார் தனது தாயாரின் ஆசிரியர் பணியிடத்தை மேன்மைப்படுத்தவும் நவீன கல்வியை சாதாரண மக்களுக்கு கிடைக்கச் செய்யும் நோக்கில் சந்திரமாரி என்ற பள்ளியை கோவை காளப்பட்டி பகுதியில் ஏற்பாடு செய்து அதன் துவக்க விழா நாளை காலை நடைபெறுகிறது.
கோவை காளப்பட்டி ரோட்டில் சந்திரமாரி சர்வதேச பள்ளி துவக்க
விழா குறித்து தலைவர்முரளி குமார் தாளாளர் சுமதி முரளி குமார் முதல்வர் டாக்டர் பிரேமா முரளிதரன் நிர்வாக அறங்காவலர் சுரேஷ்பாபு. கலைவாணி தனுஷ்கோடி .தலைமை செயல் இயக்குனர் டாக்டர் விஜய் சந்துரு. ஆகியோர் பங்கேற்று பேசினார்.
சுமார் மூன்றரை ஏக்கர் பரப்பளவில் எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை முதற்கட்டமாக சர்வதேச தர கல்வியை கோவை நகர மக்களுக்கு நாளை அர்பணிக்க உள்ளதாக பள்ளியின் தலைவர் முரளி குமார் தெரிவித்தார்.
பள்ளிப்படிப்பை பாட புத்தகங்களோடு பல அறிவியல் விஷயங்களையும் புகட்டி அனுபவ பாடங்களையும் தகுதிமிக்க ஆசிரியர்களை
கொண்டு பயிற்றுவிக்கவும் சர்வதேச போட்டிகளில் மாணவர்களை பங்கேற்க தயார் செய்வதற்கும் நாங்கள் எங்களை ஈடுபடுத்திக்
கொண்டுள்ளோம்.கோவை நகரை தாண்டி வெளிநாட்டு மாணவர்களை கோவையை நோக்கி பார்க்கச் செய்ய படிக்கச் செய்ய பல்வேறு முயற்சிகளில்செயல்பட உள்ளோம் என்று தெரிவித்தார்.
பள்ளி வளாகத்தில் நவீன விளையாட்டு வளாகம் நூலகம் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தனி மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பள்ளியில் 2023 – 2024 கல்வியாண்டிற்கு பயிலும் 5 மாணவ, மாணவிகள் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் நடத்தும் போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். இவர்களுக்கு பள்ளியில் சேர்ந்த உடன் இரண்டு வார பயிற்சி அளித்து தகுதி பெற செய்துள்ளோம் என்று பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.