January 23, 2017
தண்டோரா குழு
ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் இறுதியாக காவல் துறையினரைக் கட்டித்தழுவி தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.
ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வந்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்கு இத்தனை நாட்களாகக் காவல்துறையினர் ஒத்துழைப்பு அளித்து வந்ததால் அவர்களைக் கட்டித்தழுவி, நன்றி கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர்.