March 20, 2017
மென்பொறியாளர் அகிலா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல் ஆய்வாளருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனைதஞ்சை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தஞ்சையில், 2007 ம் ஆண்டு மென் பொறியாளர் அகிலா என்பவர் வன்கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அப்போது காவல் ஆய்வாளராக இருந்த சேதுமணி மாதவன் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு குறித்த விசாரணை, தஞ்சை மகளிர் நீதிமன்றத்தில்நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (மார்ச் 20) தீர்ப்பளிக்கப்பட்டது.அதில்சேதுமணி மாதவன் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது, இதையடுத்து,அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்திரவிட்டார்.
சேதுமணி மாதவன் தற்போது மதுரை தெப்பகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.