• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

February 14, 2023 தண்டோரா குழு

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் 1998 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு 25ஆம் ஆண்டு புஸ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பதிவுத்துறையில் பல நூறு கோடி கையூட்டு நடைபெற்றுள்ளது.நூற்றுக்கணக்கான அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.பாஜக 15 நாள் டைம் தருகிறது. நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு சார் பதிவாளர் அலுவலகம் முன்பு போஸ்டர் அடித்து ஒட்டுவோம். கைது செய்யும் வரை உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம்.

ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளளோம்.மட்டன் கொடுக்கின்றனர், புடவை கொடுக்கின்றனர்.சி.பி. ராதாகிருஷ்ணன் கவர்னர் ஆனதற்கு மகிழ்ச்சி. வரும் 17ஆம் தேதி பொறுப்பேற்கிறார். நாளை (இன்று) பிரிவு உபசார நிகழ்வு நடைபெறுகிறது.

கோவையில் துப்பாக்கி கலாச்சாரம். எஸ்.பி.ஆபீஸ் பக்கத்தில் ஓட ஓட வெட்டுவது.இதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
சமூக நீதிப் பேசும் உங்களை கவர்னர் ஆழ்ந்து பார்த்து வருகிறார்.சட்டம் ஒழுங்கு தொடர்பாக உள்துறை அமைச்சரிடம் சொல்கிறோம்.
இப்படி ஆட்சி நடந்தால் சாமானிய மக்களுக்கு ஆபத்து.காவல் துறையை சுதந்திரமாக செயல்பட விடுங்கள். தண்டனை உயர்த்துங்கள். மூடி மறைக்காதீர்கள்.உண்மையை சொல்லி தண்டனை கொடுங்கள்.

காவல்துறை பொய்யான செய்தி பத்திரிக்கைக்கு தருகின்றனர்.பாஜக தேர்தல் பொதுக்கூட்டத்தை தயார் செய்து வருகின்றனர். அதில் அதிமுக தலைவர்கள் வருவார்கள்.எங்களைப் பொறுத்தவரை இரட்டை இலை சின்னத்தில் வெற்றி வேட்பாளரை ஜெயிக்க வைக்க வேண்டும்.நெடுமாறன் அய்யா தொடர்ந்து இது போன்று பேசுகிறார். இலங்கையின் பல பகுதிகள் மோடி அய்யாவை நம்பியுள்ளது.
டெவலப்மெண்ட் ப்ராஜெக்ட்டில் மோடி அய்யாவை நம்பி உள்ளனர்.

நெடுமாறன் 2009ல் என்ன சொன்னாரோ அதைத்தான் இப்போதும் சொல்கிறார்.
இலங்கைப் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்க முடியும் என்றால் அது மோடியால் தான் என்று நெடுமாறன் தெரிவித்திருந்தார்.பிபிசி மீது வருமானவரித்துறை சோதனைக்கு காரணம் இல்லை. அதிகாரிகள் எவிடன்ஸ் அடிப்படையில் சோதனை செய்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க