March 21, 2017 தண்டோரா குழு
காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான விசாரணையை ஜூலை 11ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
காவரி நடுவர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கின் மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதில், ஏற்கனவே பிறப்பித்து இருந்த உத்தரவின்படி கர்நாடகா தினமும் 2000 கன அடிநீரை தமிழகத்திற்கு திறந்தவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் ஜூலை 11ஆம் தேதி வரை தினமும் 2000 கன அடி நீர் திறந்துவிட வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கின் மீதான விசாரணை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின் படி நீர் வழங்காத கர்நாடகா, 2480 கோடி ரூபாய் இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.