• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவேரி நிறுவனம் சார்பில் கொடிசியா வேளாண் கண்காட்சியில் விவசாயத்திற்காக புதிய இரண்டு வாட்டர் டேங்க் அறிமுகம்

July 13, 2024 தண்டோரா குழு

கோவை கொடிசியா தொழிற்க்கண்காட்சி வளாகத்தில் “அக்ரி இன்டெக்ஸ் 2024” வேளாண் கண்காட்சி ஜூலை 11ஆம் தேதி துவங்கி 15ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெற்று வருகிறது. இங்கு 498 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மலேசியா, சிங்கப்பூர், சீனா தென்கொரியா உட்பட பல்வேறு வெளிநாடுகளிலும் இருந்தும் இந்த கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ளனர்.குறிப்பாக கோவை மற்றும் கொங்கு மண்டலங்களில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் பல்வேறு அரங்குகளில் விவசாயம் சம்பந்தப்பட்ட இயந்திரங்கள் மற்றும் விவசாயம் சார்ந்த பொருட்கள் பார்வையாளர்களை வெகுவாக கலந்து வருகிறது.

குறிப்பாக, கொடிசியா E- 20,21 மற்றும் 30 அரங்கத்தில் காவேரி குரூப் ஆஃப் கம்பெனி சார்பில் விவசாயத்திற்கான புதிய இரண்டு வாட்டர் டேங்க் அறிமுக நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதனை கோவை மாவட்ட அனைத்து கட்டட பொறியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் ஒன்றிணைந்து திறந்து வைத்தனர்.

இது குறித்து காவேரி குரூப் ஆப் கம்பெனியின் இணை நிர்வாக இயக்குனர் வினோத்சிங் ரத்தோர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

காவேரி நிறுவனம் கோவை மாவட்டத்தில் வாட்டர் டேங்க் ஏழு வண்ணங்களிலும் மற்றும் பிவிசி பைப்புகள் தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறோம். தற்போது கோவை கொடிசியாவில் நடைபெறும் வேளாண் கண்காட்சியில் விவசாயிகளுக்கு பயன்பெறும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக 10 ஆயிரம் லிட்டர் வாட்டர் டேங்க் மற்றும் அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்கை ஏழு வண்ணங்களில் அறிமுகம் செய்துள்ளோம்.

இதன் மூலம் விவசாயிகள் தண்ணீரை விவசாயத்திற்கு சிக்கனமாக பயன்படுத்தவும், தண்ணீரை சேமிக்கவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். மேலும் காவேரி நிறுவனம் தொடர்ந்து தொழில் துறைக்கான புது புது கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வருகிறோம் என தெரிவித்தார்.

காவேரி நிறுவனத்தின் இந்த 10 ஆயிரம் லிட்டர் வாட்டர் டேங்க் மற்றும் அண்டர் கிரவுண்ட் வாட்டர் டேங்க் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

அறிமுக விழாவில், கோவை மாவட்ட அனைத்து கட்டட பொறியாளர் சங்கத்தின் தலைவர் விஜயகுமார், செயலாளர் ராஜரத்தினம், பொருளாளர் மணிகண்டன், துணைத்தலைவர் செவ்வேள், துணைச் செயலாளர் பிரேம்குமார் பாபு, துணை பொருளாளர் ரவி, பிஆர்ஓ திருமூர்த்தி, ஏ பி ஆர் லோகநாதன், உடனடி முன்னாள் தலைவர் ரமேஷ் குமார், பட்டய தலைவர் சுரேஷ் குமார், கோர்ட கமிட்டி நிர்வாகிகள் அத்தப்பன், சேனாதிபதி, முன்னாள் செயலாளர் ராமலிங்கம் முன்னாள் பொருளாளர் ரவிக்குமார் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் படிக்க