• Download mobile app
24 Nov 2024, SundayEdition - 3210
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

‘கின்சென்ட்ரிக் சிறந்த நிறுவன ’விருதை பெற்ற டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம்

April 18, 2023 தண்டோரா குழு

இந்தியாவில் உள்ள முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டிற்கான ‘கின்சென்ட்ரிக் சிறந்த நிறுவன ’விருதை பெற்றுள்ளது.

உலக அளவில் மனிதவள ஆலோசனைகளை கின்சென்ட்ரிக் நிறுவனம் வழங்கி வருகிறது. இது பணியாளர்களை நிறுவனம் நடத்தும் விதம் மற்றும் தங்களது துறையில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை தேர்வு செய்து அவர்களுக்கு சிறந்த நிறுவனங்களுக்கான விருதை வழங்கி வருகிறது.

மேலும் இந்த விருதின் மூலம் 10 நிறுவனங்கள் மட்டுமே இடம் பெறும் ‘கின்சென்ட்ரிக் பெஸ்ட் எம்ப்ளாயர்ஸ் கிளப்’பிலும் டாடா ஏஐஏ நிறுவனத்தை கின்சென்ட்ரிக் சேர்த்துள்ளது. கடந்த 3 வருட சான்றிதழ்களின் மதிப்பாய்வு மற்றும் மக்கள் செயல்முறைகளின் ஆழமான பகுப்பாய்வை உள்ளடக்கிய கடுமையான மதிப்பீட்டு செயல்முறை ஆகியவற்றின் அடிப்படையிலேயே கின்சென்ட்ரிக் இந்தியா பெஸ்ட் எம்ப்ளாயர்ஸ் கிளப்பில் உறுப்பினராக சேர முடியும். இந்த மதிப்பீடு, ஒரு நேர்மறையான ஊழியர் அனுபவத்தை உருவாக்கவும், உறுப்பினர் நிறுவனங்கள் மேற்கொண்டு வரும் முன்முயற்சிகள் மற்றும் நடைமுறைகளை புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய உலகில் ஊழியர்களின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்யவும், அவர்களின் பிரச்சினைகளை களைந்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவற்றுக்கு மதிப்பு கொடுப்பதன் மூலம் டாடாஏஐஏ தொடர்ந்து சிறப்பான பணியாளர் அனுபவங்களை உருவாக்கி வருகிறது. பணியாளர் ஈடுபாடு, நிறுவனத்தின் செயல்பாடு, சிறப்பான தலைமை மற்றும் திறமையில் கவனம் ஆகிய காரணிகளின் அடிப்படையில் கின்சென்ட்ரிக் அமைப்பு நிறுவனங்களை தேர்வு செய்து விருது வழங்கிவருகிறது.

12ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து பாடுபடும் டாடா ஏஐஏவின் மனிதவள மற்றும் தலைமைக் குழுவின் முயற்சிகளுக்கு இந்த விருது சான்றாகும். ‘பணியில் சேர்வது முதல் ஓய்வு வரை’ என்ற அணுகுமுறை மூலம் ஒரு விரிவான பணியாளர் வாழ்க்கைச் சுழற்சி அனுபவத்தை உருவாக்குதல், எதிர்காலத் தலைமைக்கான நமது திறமைத் தளத்தை வளர்ப்பதற்கு ‘வெற்றிக்கான ஆள்சேர்ப்பு’, நிறுவனம் முழுவதும் நிலையான கற்றல் மற்றும் மேம்பாட்டு மனநிலையை ஏற்படுத்துதல், பல நிறுவன அளவிலான தளங்கள் மூலம் சிறப்பான செயல்திறனை அங்கீகரித்து வழங்குதல் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய டாடா ஏஐஏ தலைவர் மற்றும் மனித வள தலைமை அதிகாரியுமான கிறிஸ்டில் பெசானியா கூறுகையில், தொடர்ந்து 7வது முறையாக கின்சென்ட்ரிக் விருது கிடைத்திருப்பதும், மதிப்புமிக்க சிறந்த முதலாளிகள் கிளப்பின் உறுப்பினராக எங்கள் நிறுவனம் இணைந்து இருப்பதும் எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவமாகும். இது நமது மக்களை மையப்படுத்திய நடைமுறைகளையும், நமது மக்களுக்கான உறுதியான அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தும் சரியான நிலைப்பாடாகும். எங்கள் மனிதவள குழுவில் அங்கம் வகிக்கும் எனது சகபணியாளர்கள் அனைவருக்கும், இந்த பயணத்தில் அவர்களின் பங்களிப்பு மற்றும் ஆதரவிற்காக எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்றார். மேலும் அவர் கூறுகையில், ஊழியர்கள் எப்போதும் எங்கள் செயல்பாடுகளில் முக்கியமான ஒன்றாகவும், நிறுவனத்தின் நெறிமுறைகள் மற்றும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையிலும் உள்ளனர். இந்த அங்கீகாரம், வளர்ச்சி, ஒத்துழைப்பு மற்றும் புதுமைகளை வளர்க்கும் பணிச்சூழலை உருவாக்குவதற்கான எங்களின் தொடர்ச்சியான மற்றும் நிலையான முயற்சிகளுக்கு ஒரு சான்றாகும். ஊழியர்களின் ஈடுபாடு மற்றும் அவர்களின் நல்வாழ்வு ஆகியவை எங்கள் வணிக செயல்பாடுகளில் ஒருங்கிணைந்த ஒன்றாகும். எங்கள் ஊழியர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் மேம்பாட்டிற்கு நாங்கள் என்றும் முழுமையாக கடமைப்பட்டுள்ளோம் என்றும் அவர் தெரிவித்தார்.

கின்சென்ட்ரிக் அமைப்பின் உலகளாவிய கலாச்சாரம் மற்றும் ஈடுபாடு பயிற்சி தலைவர் எமிவின் மம்மா கூறுகையில், எங்கள் அமைப்பு சிறந்த நிறுவனங்கள், வேறுபட்ட பணியாளர் அனுபவங்கள் மற்றும் வலிமை மிக்க, நிலையான வணிக முடிவுகளுக்கு வழிவகுக்கும் சுறுசுறுப்பான மற்றும் பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய மற்றும் பணியாளர்களை சிறப்பாக நடத்தும் நிறுவனங்களை கண்டறிந்து அவர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் சிறந்த நிறுவனமாக டாடா ஏஐஏ தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கு காரணம், பணியாளர்கள் மீதான ஈடுபாடு, சுறுசுறுப்பான செயல்பாடு, ஈடுபாட்டுடன் கூடிய தலைமை மற்றும் திறமையில் கவனம் ஆகியவையே ஆகும். இந்த அங்கீகாரத்தைப் பெற்ற டாடா ஏஐஏ நிறுவனத்திற்கு எங்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

உலக அளவில் மனிதவள ஆலோசனை வழங்கி வரும் கின்சென்ட்ரிக் நிறுவனம், தங்கள் ஊழியர்களுக்கு சிறந்த அனுபவங்களை உருவாக்கி அவர்களுக்கான உறுதிப்பாட்டை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிறுவனங்களை தேர்வுசெய்து அந்த நிறுவனங்களை கவுரவித்து வருகிறது. 2016–ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக டாடா ஏஐஏ நிறுவனம் இந்த விருதை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க