October 3, 2017 தண்டோரா குழு
வாஷிங்டன்னில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களில் சுமார் 6௦ சதவீத ஊழியர்களை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் கியூபா நாட்டின் தூதரகம் அமைந்து உள்ளது. பல ஆண்டுகளாகவே அமெரிக்கவிற்கும் கியூபா நாட்டிற்கும் இடையே பகை இருந்தது வந்தது. ஆனால், சமீபத்தில்தான் இருநாடுகளுக்கு இடையே நல்லுறவு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கியூபா நாட்டின் தலைநகரான ஹவானாவில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தில் பணிபுரிந்து வந்த சுமார் 21 அமெரிக்க ஊழியர்கள் எதிர்பாராத விதமாக காது, கண் பார்வை, இருதயம் மற்றும் மூளை உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க ஊழியர்களின் 6௦ சதவீத ஊழியர்களை குறைத்தது.
இதனையடுத்து, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரிலிருக்கும் கியூபா தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களில் 6௦ சதவீத ஊழியர்களை குறைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இந்த முடிவு கியூபா நாட்டை தண்டிக்கும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை என்றும், இரு நாடுகளின் தூதரகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை சமமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.