• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி

December 9, 2023 தண்டோரா குழு

சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பொதுமக்கள் பலர் வீட்டிலிருந்து வெளியே வர முடியாமல் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில்
கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் 5000 பிரட் பாக்கெட்டுகள், ஆயிரம் அரிசி மூட்டை (5 கிலோ எடையில்), ஆயிரம் சானிட்டரி நாப்கின் பாக்கெட்டுகள் லுங்கி போன்றவற்றை சங்கத் தலைவர் உதயகுமார் செயலாளர் கேசிபி சந்திர பிரகாஷ், மைக்கேல் உள்ளிட்ட நிர்வாகிகள் அனுப்பி வைத்தனர். இதன் மதிப்பு 3 லட்ச ரூபாய்.

இதே போல் கோவை மாவட்ட குவாரி மற்றும் கிரசர் உரிமையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் 3 ஆயிரம் வாட்டர் பாட்டில்கள் 5 கிலோ எடையில் 500 பாக்கெட் கோதுமை மாவு, 5 கிலோ எடையில் ஆயிரம் அரிசி பேக்,ஆயிரம் லுங்கி, 500 பெட்ஷீட் போன்றவை அனுப்பி வைக்கப்பட்டது.இவற்றின் மொத்த மதிப்பு 6 லட்சம் ரூபாய்.நிவாரண பொருட்களை சங்க மாநிலத் தலைவர் சின்னசாமி, நந்தகுமார், செல்வராஜ் உள்ளிட்டோர் அனுப்பி வைத்தனர்.

மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் மற்றும் கிரசர் சங்கத்தின் சார்பில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் படிக்க