May 13, 2022 தண்டோரா குழு
கோவை கிருஷ்ணம்மாள் கல்லூரியில் நடைபெற்ற குழந்தைகள் மற்றும் மாணவிகளின் ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கிருஷ்ணம்மாள் மகளீர் கல்லூரியில் இளங்கலை ஆடை வடிவமைப்பு துறை மற்றும் அழுகுத் துறை இணைந்து கடந்த 4ஆண்டுகளாக ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியினை நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் இந்த ஆண்டு எவன்சா 2022 எனும் ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
இதில் அத்துறையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட மாணவிகளால் வடிவமைக்கப்பட்ட ஆடைகளை குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு அணிவிக்கப்பட்டு ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.இந்த ஆடை அலங்கார அணிவகுப்பு போட்டியில் குழந்தைகள்,மற்றும் மணப்பெண் ஆடைகளுடன் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்த்தினர்.
தொடர்ந்து வெற்றிபெற்ற குழந்தைகள் மற்றும் மாணவிகளுக்கு கிருஷ்ணம்மாள் கல்லூரியின் தலைவர் நந்தினி மற்றும் செயலாளர் யசோதா தேவி, கல்லூரியின் முதல்வர் நிர்மலா, துறைத் தலைவர்கள் கலாவதி, சாந்தி,ராதிகா, கற்பகவல்லி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.