August 8, 2022 தண்டோரா குழு
கோவை பீளமேடு பகுதியில் உள்ள, கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், இன்று, முதலாமாண்டு மாணவியர்களுக்கான
தொடக்க விழா நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை பீளமேடு பகுதியில், கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகினறது. இந்த கல்லூரியில்,2022 மற்றும் 2023 ஆம் கல்வியாண்டில் கல்வி கற்க சேர்ந்துள்ள மாணவியர்களுக்கான தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட காவல்ஆணையர் பாலகிருஷ்ணன், கலந்துகொண்டு மாணவிகள் மத்தியில், சிறப்புறையாற்றினார்.
இதனை தொடர்ந்து, கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி வரவேற்புரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் மாணவிகள் மத்தியில் பேசிய காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசுகையில்,
இன்றைய நவீன உலகில் மாணவிகள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். சைபர் க்ரைம் குற்றப்பிரிவில், மாணவிகளுக்கு எதிராக எந்தமாதிரியான குற்றங்கள் அதிகமாக நடைபெறுகின்றது.அதற்கு மாணவிகளின் பாதுகாப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.
மேலும்,போதைபொருட்களின் பக்கவிளைவுகளையும் சமுதாயத்தில் மாணவர்களின் முக்கியப் பொறுப்புகளையும் அவர்களின் கடமைகளையும், பாதுகாப்பும், மாணவிகளின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது குறித்து, எடுத்துக்கூறினார். மாணவிகளுக்கு காவல்துறையானது எப்போதும் தம் கடமையையும் பாதுகாப்பையும் வழங்கும் என உறுதியளித்தார்.
இதனையடுத்து கல்லூரியின் செயலர் முனைவர் நா.யசோதாதேவி, மாணவியர்களுக்கு கல்லூரி நிகழ்வுகள், பாடத்திட்டங்கள், கல்வியின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.நிர்மலா மாணவியர்களுக்கு கல்லூரி சார்ந்த சாதனைகன், கல்வியின் வளமைகள் மற்றும் தேசியதர வரிசைப்பட்டியலில் நமது கல்லூரி 6-ஆவது இடத்தினையும், தேசியந்தர மதிப்பீட்டில் A” அங்கீகாரத்தைப் பெற்று, இக்கல்லூரி சிறப்புடன் செயல்பட்டு வருகின்றது என்றார்.
மேலும் இந்த நிகழ்வில் சிறப்பு கௌரவ விருந்தினர் மற்றும் கல்லூரியில் முன்னாள் மாணவி முனைவர் அருணா ராமச்சந்திரன், கலந்து கொண்டார். மேலும் முன்னாள் மாணவியர்களான பிரீஷா, ரெபெக்கா எல்சாஜெஸ் ஆகியோரும் மாணவிகளின் முதல் நாள் பயம் குறித்து விளக்க உறையாற்றினார்.