June 23, 2017
தண்டோரா குழு
கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழரின் கலாச்சார அடையாளங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள் பெங்களூரு அருங்காட்சியாகத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் கனிமொழி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,கீழடியில் அருங்காட்சியகம் அமைப்பதற்காக 2 ஏக்கர் நிலம் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டதாகவும் தொல்லியல் துறையும் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசு வழங்கிய நிலத்தில் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என இந்திய தொல்லியல் துறைக்கு நீதிபதிகள் செல்வம், ஆதிநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.பின்னர் வழக்கு விசாரணையை ஜூலை 24-ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.