• Download mobile app
08 Sep 2024, SundayEdition - 3133
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குக்கர் நிறுவனம் சார்பில் பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான ‘ஃபுட் டெக் ஹேக்கத்தான்’

March 2, 2024 தண்டோரா குழு

தமிழ்நாட்டில் ஏழு மாவட்டங்களில் குக்கர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் புதிய கிளையை துவக்க உள்ளது.குக்கர் நிறுவனம் ஒரு உணவு விநியோக தளத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உணவுகளை விநியோகம் செய்வதற்கு மாறாக வீட்டில் சமைக்க கூடிய உணவு வகைகளை வீட்டிற்கே விநியோகம் செய்து வரும் நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.

குக்கர் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ பிரபா சந்தானகிருஷ்ணன், இணை நிறுவனர்கள் நிர்மல்குமார், சரவணகுமார் கந்தசாமி ஆகியோரின் முயற்சியில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் தற்போது இருக்கும் சூழலில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் தொழில்களில் ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதற்காகவும் ஹேக்கத்தான் நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டனர்.

இதில் குக்கர் நிறுவனம் சார்பில் உணவு விநியோகத்தில் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் சிக்கல்களை தீர்க்கும் வகையில் ‘ஃபுட் டெக் ஹேக்கத்தான் 2024’ என்னும் நிகழ்ச்சி கோவையில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்காக நடத்தினர். முதல்முறையாக கோவை ஜிசிடி கல்லூரியிலும், அதனை தொடர்ந்து சனிக்கிழமை இன்று காலை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியிலும் ஃபுட் டெக் ஹேக்கத்தான் நிகழ்ச்சியை நடத்தினர்.

வஇதன் துவக்க விழாவில், பி எஸ் ஜி பொறியியல் கல்லூரியின் பேஸ்மெண்ட் அண்ட் டிரைனிங் டீன் டாக்டர் ஆர். நடராஜன் மற்றும் குக்கர் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாடு துணைத் தலைவர் ராமநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

‘ஃபுட் டெக் ஹேக்கத்தான்’ போட்டியில் பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரியில் முதல் சுற்றில் 300 மாணவர்களின் 80 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் வெற்றி பெற்ற முதல் 5 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஹேக்கத்தான் இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற மூன்று அணிகளுக்கு குக்கர் நிறுவனம் சார்பில் ரூபாய் 50,000 மதிப்புள்ள பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இதில், ராகவன் மற்றும் கார்த்திக் மணியன் ஆகியோர் ரூபாய் 25 ஆயிரம் மதிப்பில் முதல் பரிசு பொருட்களை பெற்றனர். பிஷ்வஜித் பரத்வாஜ் மற்றும் தருன் ஆகியோர் ரூபாய் 15,000 ரூபாய் மதிப்பில் இரண்டாம் பரிசுப் பொருட்களை பெற்றனர். மூன்றாவது இடத்தில் ராதாகிருஷ்ணன், மதியழகன் மற்றும் சஞ்சனா, ப்ரீத்திகா ஆகியோர் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பெற்றனர். இதனை
குக்கர் நிறுவனத்தின் மென்பொருள் மேம்பாடு துணைத் தலைவர் ராமநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியை, பி.எஸ்.ஜி பொறியியல் கல்லூரி பேராசிரியர் செந்தில் குமரன், ரூபன்ராஜ் பழனிக்குமார் மற்றும் குக்கர் நிறுவனத்தினர் ஒருங்கிணைந்தனர்.

மேலும் படிக்க