• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிநீர் விநியோகத்தில் அலட்சியம் காட்டினால் நடவடிக்கை – கிழக்கு மண்டல தலைவர் எச்சரிக்கை

April 27, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல கவுன்சிலர்கள் கூட்டம் அதன் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது. மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமை தாங்கினார். உதவி கமிஷனர் மாரிச்செல்வி முன்னிலை வகித்தார்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகளில் உள்ள தண்ணீர் பிரச்னை குறித்து முறையிட்டனர். அதற்கு உடனடியாக உரிய தீர்வுகாண வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதன்பிறகு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கார்த்திக் பேசியதாவது:

கோவை மாநகராட்சியில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தின்போது, குடிநீர் விநியோக பணி உள்பட எல்லா பணிகளும் பாழ்பட்டு போய்விட்டது. மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். தற்போது கோடை காலம் என்பதால் மக்களின் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. கோவை மாநகரில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய கடந்த திமுக ஆட்சி காலத்தில் பில்லூர் -1, பில்லூர் -2, கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டம், ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம் என பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்போது, நமது முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் அதாவது, 2008ம் ஆண்டு கோவை மாநகர மக்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.595 கோடியில் 24 மணி நேர குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த 2010ம் ஆண்டு இத்திட்டத்துக்கு அனுமதி கோரி கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தால், அதிமுக ஆட்சியில் கிட்டத்தட்ட 8 ஆண்டு காலம் இத்திட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். 2018ம் ஆண்டு இத்திட்டம சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இத்திட்டப்பணிகள் நிறைவடைய இன்னும் பல காலம் ஆகும். அதுவரை மக்கள் குடிநீர் பிரச்னையை தாங்கிக்கொண்டு இருக்க முடியாது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள், ஏற்கனவே நடைமுறையில் உள்ள குடிநீர் திட்டப்பணிகளில் எவ்வித தொய்வும் ஏற்படாமல், மக்கள் நலனில் அக்கறை கொண்டு, முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

கிழக்கு மண்டல பகுதியில் பல இடங்களில் 20 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வருகிறது. அதுவும், அழுத்தம் இன்றி மிக மிக குறைவாக தண்ணீர் வருகிறது. இது, மக்களுக்கு போதுமானதாக இல்லை. இன்னும் சில இடங்களில் குடிநீர் யாருக்கும் உபயோகம் இன்றி வீணாகிறது. பல இடங்களில் குடிநீருடன் சாக்கடைநீர் கலந்துவருவதாகவும், ஆழ்குழாய் தண்ணீர் கலந்து வருவதாகவும் புகார் தெரிவிக்கிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் விநியோக பிரிவில் உள்ள ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினால் இதுபோன்ற குறைபாடுகளை களையலாம்.

ஆனால், தற்போதைய நிலையில் பல ஊழியர்கள் ஏனோதானோ என பணியாற்றுகிறார்கள். தண்ணீர் திறந்துவிடும் ஊழியர்கள் பலர், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு முறையாக பதில் அளிப்பது இல்லை. அதுபோன்ற ஊழியர்கள் தங்களது தவறை திருத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு தனியாக கவுன்சலிங் நடத்தப்படும்.அந்தந்த பகுதிகளில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் தண்ணீர் முழு அளவில் நிரப்பிய பிறகு, வார்டுகளுக்கு திறந்துவிட்டால் நல்ல அழுத்தத்தில் தண்ணீர் கிடைக்கும். இதை, அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தபோது, மாநகர மக்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், அதற்கான பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் செய்வார்கள் என உறுதியளித்தார். ஆனால், முதல்வரின் அறிவிப்பை நிறைவேற்றும் வகையில் இங்குள்ள அதிகாரிகள் செயல்படவில்லை. தண்ணீர் பிரச்னை மக்களிடம் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, குடும்ப தலைவிகளிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நானும் ஒரு குடும்ப தலைவிதான்.

தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக குடும்பத்தில் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும் என எனக்கு நன்றாக தெரியும். குடிநீர் விநியோகத்தில் அலட்சியம் காட்டும் அதிகாரிகளாக இருந்தாலும் சரி, ஊழியர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மக்களின் பிரச்னைகளை உணர்ந்து, அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க