June 23, 2017
தண்டோரா குழு
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்க்கு ஆதரவு தெரிவிப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க மூன்று அணியாக பிளவுப்பட்டிருத்தது. இந்நிலையில் அதிமுக அம்மா அணியை சேர்ந்த எடப்பாடி பழனிசாமியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த ஓ.பன்னீர்செல்வமும் பாஜக வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்திருந்தனர்.
அதிமுகவின் மற்றொரு அணியாக பிரிந்துள்ள டிடிவி தினகரனும் பாஜக வேட்பாளர் ராம்நாத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளார். சசிகலா உத்தரவின் பேரிலேயே தான் இந்த ஆதரவை தெரிவிப்பதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்றாக பிரிந்துள்ள அதிமுக கட்சி ஒரே வேட்பாளருக்கே ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.