• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடியிருப்பு சுவர்களில் வரையப்பட்டு வந்த ஓவிய பணிகள் நிறைவு – மக்கள் பயன் பாட்டிற்கு திறப்பு

November 24, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி சார்பாக மாநகர் முழுவதும் ரூ.1500 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் குளங்களை சீரமைத்தல், புனரமைத்தல், அழகு படுத்துதல்,படகு சவாரி உருவாக்குதல், திருவிளக்குகளை எல்.இ.டி விளக்குகளாக மாற்றுதல், 24 மணி நேர குடிநீர் திட்டம், சாலை வசதிகள் தெருக்களை அழகு படுத்துவது, மிதிவண்டி பாதை உருவாக்குவது,அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உட்பட பல்வேறு மாநகராட்சி கட்டிடங்களில் ஓவியங்கள் வரைவது போன்ற பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பு கட்டிடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இந்த அடுக்குமாடி குடியிருப்பு சுவர்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தனியார் அமைப்புடன் இணைந்து மாநகராட்சி சார்பாக ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது.இந்த ஓவியங்கள் பல்வேறு காலை வணக்கங்களுடன், பல்வேறு மென்பொருள் சார்ந்த கருத்துக்களை வரைபட்டு வருகிறது.

குறிப்பாக வானம் படிப்பு கல்வி போன்றவை இதில் முக்கிய இடம் பெற்றுள்ளன. இந்த பணிகள் கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக புல்லுக்காடு பகுதி அடுக்கமாட்டி குடியிருப்பு சுவர்களில் வரையப்பட்டு வந்த ஓவிய பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை கலெக்டர் சமீரன், போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், ஆகியோர் பார்வையிட்டு தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க