இந்தியாவின் உள்நாட்டு மின்வணிக தளமான ஃபிளிப்கார்ட், கடுமையான கோடை வெப்பத்தை சமாளிக்க குதூகல மூட்டும் அசத்தலான சலுகைகளை இணைத்து ‘தமிழகத்தைக் கூலாக மாற்றும் ஏசி சலுகைகள்’ என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
22 ஃபீட் டிரைபல் வோர்ல்டுவைடு நிறுவனத்தால் கருத்துருவாக்கம் செய்யப்பட்டுள்ள இந்த திட்டம், மிகைப்படுத்தப்பட்ட ஆனால் தொடர்புடைய சூழ்நிலைகள் மூலம் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது – ஃபிளிப்கார்ட்டின் குளிரூட்டும் தீர்வுகள் மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கி வெப்பதான தருணங்களும் சிறந்த நிலைக்கு மாறுவதை இது காட்சிப்படுத்துகிறது.
இந்திய குடும்பங்கள் எதிர் கொள்ளும் கோடைக்கால சவால்களை எடுத்துக்காட்டும் வகையில் ஒரு புதிய விளம்பரத் திட்டத்தை ஃபிளிப்கார்ட் தொடங்கியுள்ளது, அதாவது கடுமையான வெப்பம் முதல் அதிகரித்து வரும் கோபம் வரை இதில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. வெப்பம் உணர்ச்சிகளை தீவிரப்படுத்தும் அன்றாட சூழ்நிலைகளையும், எளிமையான குளிரூட்டும் தீர்வுகள் மிகவும் தேவையான நிவாரணத்தையும் வழங்குவதை இவை வெளிப்படுதுகின்றன.
ஒரு படத்தில்,தங்கள் மகனின் உதவித்தொகை அறிவிப்பை பற்றி அறியும் ஒரு குடும்பத்தின் உணர்ச்சி கொந்தளிப்பை படம் பிடித்துகாட்டுகிறது,ஆனால் அந் தவெப்பம்அந்தத ருணத்தை இன்னும் அதிகமாக உணரவைக்கிறது.மற்றொரு படம், ஆற்றல் திறன் கொண்ட பிஎல்டிசி மின் விசிறியின் நீண்டகால நன்மைகளை நடைமுறை, பணப்பைக்கு ஏற்ற தேர்வாக விளக்கி, ஒரு லேசான அணுகு முறையை வெளிப்படுத்துகிறது.
மூன்றாவது படம், அதிகரித்து வரும் வெப்ப நிலையால் ஏற்படும் எரிச்சலால் ஒரு ஜோடியின் விடுமுறை திட்டம் எப்படி தடம் புரள்கிறது என்பதை நகைச்சுவையாக சித்தரிக்கிறது. இந்த திட்டம் மார்ச் 26–31 வரை நடைபெறும் பிளிப்கார்ட் கூலிங்டேஸுடன் இணைக்கப்பட்டுள்ளது, ₹26,490 முதல் தொடங்கும் 1.5 டன் ஏசிகள், ₹1,999 முதல் தொடங்கும் ஆற்றல் திறன் கொண்ட மின் விசிறிகள் மற்றும் ₹3,999 முதல் தொடங்கும் கூலர்கள் போன்ற தயாரிப்புகளை வழங்குகிறது.
வரவிருக்கும் கோடை மாதங்களை இந்தியா எதிர்கொள்ள தயாராகி வருவதால், குளிரூட்டும் தீர்வுகளை மேலும் அணுகக்கூடியதாகவும் மலிவுவிலையிலும் மாற்றுவதே இந்த விளம்பரப் பிரச்சாரத்தின் நோக்கமாகும். “ஃப்ளிப்கார்ட்டில், ‘தமிழகத்தைக் கூலாக மாற்றும் ஏசி சலுகைகள்” விளம்பரப் பிரச்சாரத்தின் மூலம், சிறந்த பொருட்களை தரமான சலுகைகள் மூலம் வழங்கி உண்மையான நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். கோடை வெப்பம் தீவிரமடைகையில், இது உடல் அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் மனநிலையையும் அன்றாட வழக்கங்களையும் பாதிக்கிறது. ஃபிளிப்கார்ட் கூலிங் டேஸ் மூலம், நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கு மலிவு விலையில், ஆற்றல் திறன் கொண்ட குளிரூட்டும் தீர்வுகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். கவர்ச்சிகரமான பரிமாற்றச் சலுகைகள் மற்றும் நெகிழ்வான கட்டண விருப்பங்களுடன், சிறந்த பிராண்டுகளின் எங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வு, தமிழக நுகர்வோரின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்துதடையற்ற, மதிப்பு சார்ந்த ஷாப்பிங் அனுபவத்தை உறுதி செய்கிறது”.
குளிர்விக்கும் தீர்வுகளை மேலும் அணுகக்கூடியதாக மாற்ற, ஃபிளிப்கார்ட் 12 மாதங்கள் வரை கட்டணமில்லா இஎம்ஐ திட்டங்களையும் முன்னணி வங்கிகள் மூலம் உடனடி சேமிப்பையும் வழங்குகிறது. கூடுதலாக, சூப்பர் காயின்ஸ் ஒப்பந்தங்கள் மற்றும் பரிமாற்ற சலுகைகள் மூலம், வாடிக்கையாளர்கள் அதிக நிதி நெகிழ்வுத்தன்மையை அனுபவிக்க முடியும் என்று ஃபிளிப்கார்ட்டின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊடகத் தலைவர் பிரதிக் ஷெட்டி கூறினார்.
ஈஷாவில் நிறைவுபெற்ற பாதுகாப்பு படைகளுக்கான ஹத யோகா பயிற்சி நிகழ்ச்சி!
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு : மாநில அளவிலான கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோவையில் துவங்கியது
கோவையில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களுக்கு பிராண்ட் கோயம்புத்தூர் தூதுவர் விருது
தான்ஹ் காங் குருப்பும் ஸ்கோடா குஷக் மற்றும் ஸ்லாவியாவை அசெம்பிள் செய்யும் ஆலை வியட்நாமில் திறப்பு
கோவையில் ₹37,500 ரூபாயில் மின்சார வாகனங்கள் – அசத்தும் ஓசோடெக் நிறுவனம் !
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோய் சிறப்பு ஒரு நாள் முகாம்!