December 1, 2022 தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளும் ஐந்து மண்டலங்களும் உள்ளன.சுமார் 6500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016 மற்றும் கோவை மாநகராட்சி துணைவிதிகள் படி, வீட்டுக் கழிவுகளை அதாவது மக்கும் குப்பை, மக்காத குப்பை, சானிட்டரி குப்பை மற்றும் அபாயகரமான குப்பை என தரம் பிரிக்காமல் தொடர்ந்து சாலையில் தூக்கி எறிந்து சுற்றுச்சூழலுக்கும், பொது சுகாதாரத்திற்கும் கேடு விளைவித்தால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே குப்பைகளை சாலையில் எறியக்கூடாது என வார்டு வாரியாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.எனினும் சிலர் குப்பைகளை சாலையில் எறிந்துவிட்டு செல்கின்றனர்.இதனை கண்காணிக்க சிசிடிவி பொருத்தவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
மேலும் சுகாதார ஊழியர்கள் மூலம் தினமும் தெருக்கள் தோறும் ஆய்வு மேற்கொண்டு சாலையில் குப்பைகளை எறிந்துவிட்டு செல்வோர் மீது நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.