• Download mobile app
21 Apr 2025, MondayEdition - 3358
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குமரகுரு கல்லூரியில் காலநிலை நடவடிக்கை குறித்து இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களிடையே கருத்தரங்கம்

June 11, 2023 தண்டோரா குழு

கோவை குமரகுரு நிறுவனத்தில் காலநிலை நடவடிக்கை குறித்து இளைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஒய்20 டாக் ஆன் கிளைமேட் ஆக்சன் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை குமரகுரு நிறுவனங்கள் மற்றும் The Plantterra இணைந்து குமரகுரு வளாகத்தில் Y20 Talk on climate Action நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆறாவது நிர்வாக இயக்குனரும்,நார்வே அரசாங்கத்தின் முன்னால் அமைச்சரும், தமிழ்நாடு காலநிலை நடவடிக்கை குழுவின் ஆட்சிக்குழு உறுப்பினருமான எரிக் சோல்ஹிம் என்பவர் காலநிலை நடவடிக்கையில் இளைஞர்களின் பங்கு மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

காலநிலை நடவடிக்கையில் தொழில்நுட்பம் எனும் தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில், காலநிலை நடவடிக்கைகளில் தொழில்நுட்பத்தின் பங்களிப்பையும், பல்வேறு துறைகளின் முன்னெடுப்புகளையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. மேலும் கல்வி சூழலில் இயற்கை பாதுகாப்பையும் இளம் தலைமுறைக்கு எடுத்துரைக்கப்பட்டதுடன் காலநிலை நடவடிக்கையில் உள்ள பிரச்சனைகள் குறித்து இளைஞர்களிடம் தன்னார்வலரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

இதில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், இந்தியாவின் தலைவர் பாலகுமார் தங்கவேலு, வெர்சா ட்ரைவ்ஸ் ப்ரைவேட் லிமிடெடின் நிர்வாக இயக்குனரான சுந்தர் முருகானந்தம் ProClime தலைமை நிர்வாக அதிகாரியான கவின் குமார் கந்தசாமி மற்றும் Beyond Sustainability – யின் தலைமை நிர்வாக அதிகாரியான ஹரி ப்ரசாத்,குமரகுரு நிறுவனத்தின் பொது மேலாளரான சரவணன்,PSGCAS இல் தகவல் தொடர்பின் தலைவர் டாக்டர் ஜெயபிரகாஷ் ,சிறுதுளியின் விழிப்புணர்வு ஒருங்கிணைப்பாளரான சுஜனி பாலு மற்றும் அருளகத்தின் இணை நிறுவனரான எஸ் பாரதிதாசன் ஆகியோர் கலந்து கொண்டு காலநிலை குறித்து உரையாற்றினர்.

மேலும் படிக்க