September 3, 2022 தண்டோரா குழு
75 வருட சுதந்திர இந்தியாவை கொண்டாடும் விதமாக “தி ஆர்ப்” தற்காலத்திற்கேற்ற உத்வேகத்துடன் உருவாக்கப்பட்ட இடமாகும்.
115 அடி உயர கொடிக்கம்பத்துடன் கூடிய வட்ட வடிவிலான மேடையும், அகண்ட திறந்தவெளி அரங்கத்தையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விடம், பல நிகழ்வுகளாலும், ஆக்கபூர்வமான செயல்பாடுகளாலும் மற்றும் போற்றுதலுக்குரிய தருணங்களாலும் அலங்கரிக்கப்பட உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி அரங்கை திறந்து வைத்து உரையாற்றினார்.
பரம்வீர் சக்ரா விருது பெற்ற இளையவரான சுபேதார் மேஜரும் கவுரவ கேப்டனுமான யோகேந்திர சிங் யாதவ் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை வழங்கினார்.தி ஆர்பில் சுதந்திர உணர்வை தூண்டும் முவர்னக் கொடி 24 மணி நேரமும் பறந்து தேசிய பெருமையை காத்து நிற்கும். இத்திடல் 800க்கும் மேற்பட்ட மக்கள் அமரும் வசதி கொண்ட திறந்தவெளி அரங்குடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
இது மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளை வழங்கும் மையமாக அமையும்.
இந்த சமகால இடத்தை தேசிய மாணவர் படை, தங்கள் பயிற்சிக்காக பயன்படுத்துவார்கள். திறந்தவெளி அரங்கில் திரைப்படங்கள், கலாசார நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆகியவை இடம்பெறும் ,கலை மற்றும் வடிவமைப்பு கண்காட்சிகளை இவ்வரங்கின் சிறப்பம்சங்களாக அமையும்.
அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி பேசுகையில்,
குழந்தைகளுக்கான கல்வி, அவர்களுடைய எதிர்காலம் பராமரிப்பதுக்கான அவசியத்தை வலியுறுத்தினார். இதுவரை 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் குழந்தைகள் உரிமைக்காக குரல் கொடுத்தவர் கைலாஷ் சத்யார்த்தி. பல நாடுகளில் ஆயுதங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் குழந்தைகளுக்கான புத்தகம் அவர்களது விளையாட்டு பொருட்கள் காண அவசியம் உணராததை கண்டு வருத்தம் தெரிவித்தார்.
கோவிட் தொற்று எந்த அளவுக்கு ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்திருக்கிறது என்பதை கைலாஷ் சத்யார்த்தி சுட்டிக் காட்டினார்.புள்ளி விவரங்களின் அடிப்படையில் அவர் கூறியதாவது, கோவிட் காலகட்டத்தில் எப்படி குழந்தை தொழிலாளர் முறை அதிகரித்ததும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்ததை சுட்டிக்காட்டினார்.
ஒருபுறம் பல குடும்பங்கள் பொருளாதார ரீதியாக பின்னடைவை சந்தித்தனர், அதேசமயம் இதே கோவிட் காலகட்டம் பல கோடீஸ்வரர்களை உருவாக்கியதையும் அவர் சுட்டிக் காட்டினார். கைலாஷ் சத்யார்த்தி மனிதர்களுக்குள் இரக்கம் காட்டுவதின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். எல்லா மனிதர்களுக்கும் இரக்கம் காட்டுவது இயல்பு. ஆனால் அது நெருங்கிய உறவினர் அல்லது குழந்தைகள், சகோதரர்கள் அளவில் தான் இருக்கிறது.ஒரு ஆரோக்கியமான சூழலை உருவாகுவதற்கு இந்த இரக்க குணம் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள் காகவும் வர வேண்டும் என்றார்.
குழந்தை உரிமைக்காக குரல் கொடுத்ததற்காக பலமுறை தாக்கப்பட்ட கைலாஷ் சத்யார்த்தி குழந்தை தொழிலாளர் முறை இல்லாத உலகை உருவாக்குவதற்கான அவசியத்தை வலியுறுத்தினார். தன் வாழ்நாளில் கட்டாயம் இந்த கனவு நினைவாகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார் அதுவரை அவர் உயிர் பிரியாது என்றும் கூறினார்.
பரம்வீர் சக்கரா விருது வாங்கிய யோகேந்திர சிங் யாதவ் கூறுகையில்,
மாணவர்கள் எல்லாவிதமான சோதனைகளையும் எதிர்கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.கார்கில் போரின் போது எதிரிகளின் படையில் பல போர் வீரர்களை வீழ்த்தியதற்காக பரம் வீரா சக்கரா எனும் உயரிய விருதைப் பெற்றவர் யோகேந்திரா.தன் தந்தை ராணுவத்தில் இருந்ததும் சிறுவயதிலிருந்தே சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங் மற்றும் சந்திரசேகர் ஆசாத் போன்ற வீரர்களின் கதைகள் கேட்டு வாழ்ந்ததால் தானும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பாடுபட வேண்டும் என்பது சிறுவயதிலிருந்தே தன் குறிக்கோளாக வைத்திருந்தவர் யோகேந்திரா.தன் தந்தை போலவே 16 வயதிலேயே ராணுவத்தில் சேர்ந்தார்.
தனது 19 வயதிலேயே கார்கில் போரில் போரிட வாய்ப்பு கிடைத்ததை தன் வாழ்நாளில் மிகப்பெரிய வாய்ப்பாக கருதினார்.
இந்நிகழ்ச்சியில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் கலந்து கொண்டார். குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியின் இணை தாளாளர் சங்கர் வாணவராயர் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், தாளாளர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தனர். இந்நிகழ்வில் கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.