February 6, 2025 தண்டோரா குழு
தமிழ் இலக்கண இலக்கியத்தை மாணவர்களிடம் எளிமையாக ஆசிரியர்கள் கொண்டு சேர்க்க கோவை குமரகுரு கல்லூரியில் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை மிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
தமிழ் வளர்ச்சித் துறை; உலகத் தமிழ்ச் சங்கம் -மதுரை மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் இணைந்து தமிழாசிரியர்களுக்கான ஒரு நாள் புத்தாக்கப் பயிற்சி நிகழ்வை வியாழன் அன்று கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களின் சாராபாய் கலாம் அரங்கில் நடத்தின.
முதலாவதாக தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் வரவேற்புரை வழங்கினார்.நிகழ்விற்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார்.தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்வின் துவக்கவிழாவில் குமரகுரு கல்வி நிறுவனங்களின் பிரசிடெண்ட் சங்கர் வானவராயர்; குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் விஜிலா எட்வின் கென்னடி; கல்லூரியின் தமிழ் ஆலோசகர் மரபின் மைந்தன் முத்தையா மற்றும் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
வரவேற்புரை வழங்கிய போது, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் ஒளவை அருள் இந்த புத்தாக்க நிகழ்வின் நோக்கம் பற்றி கூறினார்.
அவர்,இந்த புத்தாக்க பயிற்சியின் மூலம் தமிழ் கற்கும் மாணவர்கள் இலக்கணத்தை எளிமையாக, நுணுக்கமாக கற்றுத்தர இன்று புது தடங்கள் உருவாகி இருக்கிறது. இதை ஆசிரியர்கள் கண்டு, கேட்டு, தங்கள் வசம் எடுத்துக்கொண்டால் அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைவார்கள். இதை ஆசிரியர்கள் வசம் சேர்க்க, தமிழக முதலமைச்சரின் கணினி தமிழ் விருது பெற்ற பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் ஆசிரியர்களிடம் பேசுவார் என்றார்.
கணினி வழியாக எப்படி மாணவர்களுக்கு இலக்கணத்தை எளிமையாக கற்று தரமுடியும் என்பது பற்றியும் பேசுவார். அதேபோல தமிழ் இலக்கியங்களை மாணவர்கள் எளிமையாக புரிந்துகொள்ள, அவர்களை கவரக்கூடிய வகையில் ஆசிரியர்களை புத்தாக்கம் செய்யவும் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக காஞ்சிபுரத்தில் இருந்து நிபுணர் கோ.சரவணன் வந்துள்ளார் எனவும் கூறினார்.
முத்தையா பேசுகையில்,
இந்த நிகழ்வில் மொழி மீதான ஆர்வத்தை மாணவர்களிடம் தூண்டிவிடும் நோக்கில் இன்று சிறப்பு பயிலரங்கமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் சுவாமிநாதன் பேசிய போது,
தற்போதைய கால சூழலின் காரணத்தாலும் பிற மொழிகள் மீதுள்ள மோகத்தாலும் தமிழ் மொழி பெய்கிறதோ என்ற அச்சம் அவ்வப்போது ஏற்படும். ஆனால் தற்போது நடைபெற்ற தமிழ் வளர்ச்சிக்கான இது போன்ற நிகழ்வுகள் மூலம் அது போன்ற நகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டு தமிழ் பாதுகாத்து புதுப்பிக்கப்படும் என்கின்ற நம்பிக்கை அதிகம் ஏற்பட்டுள்ளது எனக்கு கருத்து தெரிவித்தார். மேலும் இது போன்ற நிகழ்ச்சிகள் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில்,
தமிழாசிரியர்கள் தலைமை ஆசிரியர்களாக பொறுப்பேற்கலாம் என்கிற சட்டத்தை கொண்டு வந்தவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி என்பதை சுட்டிக்காட்டி அதே வழியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் செயல்பட்டு வருகிறார் என்று கூறினார்.
இதற்கு முன்பு தமிழ் வளர்ச்சித் துறையில் உதவி இயக்குனர் பொறுப்பு பெற வேண்டும் என்றால் முதலில் தட்டச்சர் ஆக அரசு பணிபுரிந்து அதன் பிறகு கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்று அதற்கடுத்து தான் உதவி இயக்குனராக பணி உயர்வு பெற முடியும் சூழல் இருந்தது. தற்போது இளங்கலை தமிழ் இலக்கியம் பயின்ற மாணவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையில் மாவட்ட அளவிலான உதவி இயக்குனர் பொறுப்பை பெறக்கூடிய சூழலை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது என்று தெரிவித்தார்.
இதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு எழுதி அந்த பொறுப்பை பெற முடியும் எனது உண்மை இதற்கான தேர்வுகள் நடைபெற்றுள்ளது எனவும் விரைவில் முடிவுகள் வெளிவரும் என்று அமைச்சர் கூறினார். இத்தகைய மாற்றத்தை செய்து காட்டியவர் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் என்று அவர் குறிப்பிட்டார்.