• Download mobile app
01 Mar 2025, SaturdayEdition - 3307
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குறைந்த விலையில் வெளிநாடு சுற்றுலா செல்ல கோவையில் மெட்ராஸ் மார்டன் டூரிசம் எனும் கிளை திறப்பு

February 27, 2025 தண்டோரா குழு

வெளிநாடு சுற்றுலா செல்ல விரும்புவோர்களுக்கு குறைந்த விலையில் அதன் ஏற்பாடுகளை செய்யும் விதமாக கோவையில் மெட்ராஸ் மார்டன் டூரிசம் எனும் கிளை திறக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் இருப்பார்கள்.குறிப்பாக திருமணம் முடிந்த தம்பதிகள் முதல் கல்லூரி மாணவ மாணவிகள் வரை அனைவரும் இன்ப சுற்றுலாவுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இந்நிலையில் வெளிநாடு சுற்றுலா செல்லும் நபர்கள் சிறந்த முறையில் குறைந்த விலையில் சென்று வர கோவை செல்வபுரம் பகுதியில் மெட்ராஸ் மார்டன் டூரிசம் எனும் கிளை திறக்கப்பட்டது.

துபாயை தலைமையிடமாக கொண்டு விளங்கும் இந்த கிளை பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் கோவையில் முதல்முறையாக கிளை திறக்கப்பட்டுள்ளது.
கிளையின் துவக்க விழாவை முன்னிட்டு ஸ்ரீலங்கா,பாலி, தாய்லாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு குறைந்த விலையில் பயணிக்க ஆஃபர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல இங்கு உள்ளூர் சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய ரயில்கள் பேருந்துகள் விமான டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஸ்வரி பெருமாள் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க