• Download mobile app
26 Nov 2024, TuesdayEdition - 3212
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குறை பிரசவ குழந்தைகளை காக்க வரும் ‘பயோ பேக்’

April 29, 2017 தண்டோரா குழு

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளின் உயிரை காக்க பயோ பேக் என்னும் புதிய கருவி ஒன்று அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறை பிரசவ சிக்கல்களால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1 மில்லியன் குழந்தைகள் பிறந்து இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதை தடுக்க அமெரிக்க நாட்டின் பிலடெல்பியா குழந்தைகள் மருத்துவமனை மருத்துவர்கள் ஒரு புதிய கருவியை வடிவமைத்துள்ளனர். இந்த கருவிக்கு “பயோ பேக்” என்று பெயர் வைத்துள்ளனர்.

தண்ணீர் நிறைந்த தலையணைபோல அந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் தாயின் கருவிலிருக்கும் பனிக்குட நீரை ஆய்வுக் கூடத்தில் தயாரித்து அந்த தலையணையில் நிரப்பியுள்ளனர். குழந்தையின் ரத்த ஓட்டம் மற்றும் காற்று பரிமாற்றத்தை தொப்புள்கொடி மூலம் செலுத்த, விசேஷ குழாய்கள் வெளியே இருக்கும் கருவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறை பிரசவத்தில் பிறந்த ஒரு செம்மறியாட்டு குட்டியை அந்த கருவியில் வைத்து மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். நான்கு வாரங்களில் ஆட்டுக்குட்டியின் மூளை மற்றும் நுரையீரல் திறமையாக உருவாகி இருப்பதை மருத்துவர்கள் கண்டுள்ளனர்.

இதன் மூலம் குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளை இந்த இயந்திரத்தில் வைத்து எதிர்காலத்தில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க