March 27, 2023 தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்ததாவது:
வெயில் காலம் தொடங்கி விட்டது. தண்ணீர் மிகவும் அவசியமான காலம் இது. தண்ணீர் கிடைக்கும் வழி, சேமிக்கும் விதம் ஆகியவற்றை அறிந்தால் மட்டும்தான் நம்மால் வருங்காலத்திற்காக தண்ணீரை சேமிக்கவும் பயன்படுத்தவும் முடியும். கிராமப்புறங்களில் ஒவ்வொரு வீட்டிற்கும் 55 லிட்டர் வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
திடக்கழிவு மேலாண்மை மற்றும் கழிவு மேலாண்மை முறையாக மேற்கொள்ள வேண்டும். வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும் கழிவு, மக்காத கழிவுகளை தரம் பிரித்து தூய்மைப்பணியாளர்களிடம் வழங்க வேண்டும். அதன் மூலம் குப்பைகள் நீர்வழிப்பாதைகளை அடைப்பதை தடுக்க முடியும். நிலத்தடி நீரை பாதுகாக்க முடியும். குப்பைகளை தரம்பிரிக்காமல் வழங்குவது, சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும். கிராமப்புறங்களில் வீடுகளின் கழிவுகளை சுத்திகரிப்பு நிலையத்துடன் இணைக்கவேண்டும்.
மக்காத பொருட்களை மறுசுழற்சி செய்ய வேண்டும். பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்க்கூடாது. மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும். குழந்தைகளுக்கு தண்ணீர் சேமிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.